Posts

Showing posts from February, 2018

இலக்கிய விழாவில் --வரவேற்புரை –

      நிறை நிலா மன்றம் 10.02.2018 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் திரு சைவமணி கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு வரவேற்புரை – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் .                                                                        தேவாரம் மும்மூர்த்திகள்   பாடிய பாடல்கள் தே வாரம் ;   தேவாரப் பாடல்கள் பாடினால் மனதில் கேட்பது ஆர வாரம் . பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் ஞானசம்பந்தர் ; அடுத்த மூன்று திருமுறைகள் பாடியவர் நாவுக்கரசர் . ஏழாவது திருமுறை பாடியவர் எம்பெருமான் சுந்தரர் . தேவாரப் பாடல்கள் நாம்   பாடும்   போது நாம் ...

ஒரு கவிஞன் ஒரு காலை ஒரு காட்சி ஒரு கவிதை

                                     பொங்கல் வாழ்த்துக்கள்                  ஒரு கவிஞன்  ஒரு காலை                      ஒரு காட்சி     ஒரு கவிதை விழிகள்   திறந்தன,   விழிப்பு   வந்தது இரவு   முடிந்ததால்,   நிலவு   மறைந்ததால் பகலவன்   வந்ததால் ,   பகல்   தெரிந்ததால் மலர்கள்   மலர்ந்ததால்,   பறவைகள்   பறந்ததால் . கட்டிய   மனைவி தந்த    காபியின்   மணம்   வந்ததால், மஞ்சள்   குளித்து   வரும்   மனைவியின் மணமும்   வந்ததால் எழுந்தேன்,    காலைக்   கடன்களைக் கடமையுடன்   முடித்தேன் ,   நண்பர்களைப் பார்க்கும்   ஆவலை ...

மனைவிக்கு ஒரு வாழ்த்து மடல்

கே . சங்கர கோபாலகிருஷ்ணன் – 70  எஸ் . செல்லம்மாள் – 65 விழா :  பீமரத சாந்தி  திருமணம்     நாள் : 30.10.2017  நேரம் : 5.30 – 7.30                 இடம் : திருக்கடையூர்                              மனைவிக்கு ஒரு வாழ்த்து மடல் குறையொன்றுமில்லை   என்   மனைவி எனக்கு   மனைவியாக   அமைந்ததில் ! இல்லதென்   இல்லவள்   மாண்பானால் குறளுக்கு   விளக்கம்   இவளே ! வாழ்க்கைத்   துணையென   வந்தவள் என்   வாழ்வின்   துணையாணாள் ! இல்லற   வாழ்வில்   ஈரிரண்டு   பிள்ளைகள் ! இணையில்லா   கிள்ளைகள் ! நாற்பத்திரண்டு   ஆண்டுகள் நகர்ந்தது   தெரியவில்லை ! நீண்டதொரு   பயணம்   என்னுடனும்,   பிள்ளைகள், மற்றும...

குடியரசு தினம் -- 2018

                                                      குடியரசு தினம்   --   2018 இந்திய நாட்டின் விடுதலை வாங்கித் தந்த ஆத்மா , மகாத்மா காந்தி என்பதை அறிவோம் இந்தியாவின்   முதல்   குடியரசுத்   தலைவர்   இராஜேந்திர   பிரசாத்   என்பதை    அறிவோம் . இந்தியாவின் முதல் பிரதம மந்திரி குழந்தைகளை    நேசித்த ,    ரோஜாவின் ராஜா ஜவஹர்லால் நேரு என்பதை   அறிவோம் . ஒன்று   பட்ட   இந்தியா   உருவாகியது ,   உருவாக்கியது சர்தார்    வல்லபாய்   பட்டேல்   என்பதை    அறிவோம் பார்வையில்   நேர்மை ,    பதவியில் தூய்மை வாழ்ந்து மறைந்த தமிழ் நாட்டின் முதல்வர்கள் ஓமந்தூரார் ,   காமராசர் ...

Boats Sail On The Rivers -- Christina Georgina Rossetti

Boats Sail On The Rivers  --  Christina Georgina Rossetti Boats sail on the rivers, And ships sail on the seas, But clouds that sail across the sky, Are prettier far than these. There are bridges on the rivers, As pretty as you please; But the bow that bridges heaven, And overtops the trees, And builds a road from earth to sky, Is prettier far than these. மேகங்களும் வானவில்லும்   --  கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் அழகிய   படகுகள்   ஆழமான நதி   நீரில்   நீந்திச்   செல்கின்றன கண்கவர்   கப்பல்கள்   காத தூரம் கடல்   நீரில் நீந்திச்   செல்கின்றன மங்கையரின்   கூந்தலென   வானத்தில் மேகங்கள்   நீந்திச்   செல்கின்றன அழகிய   படகுகள் ,   கப்பல்கள் ,   மங்கையரின்   கூந்தல்   அழகை விட வானத்தில்   நீந்திச்   செல்லும் மேகங்களின்   அழகுதான்   அழகு ! நதிகளின்   மேலமைந்த   பாலங்கள...

இனிய புத்தாண்டு -- 2018

              இனிய   புத்தாண்டு   --  2018 புத்தாண்டின் வாழ்த்துக்கள் இன்பம்    இங்கு   இன்று பொங்கட்டும் இனிமை   எங்கும்   நன்று நிறையட்டும் இனியன   மனதில் என்றும்    தங்கட்டும் இல்லறம்   இனிதென   வாழ்வில்   சிறக்கட்டும் இன்னாச்   சொல்   இன்று   விலகட்டும் இனிய   சொல்   பிறகு   பிறக்கட்டும் இடுக்கண்   இல்லாமல் மறையட்டும் இரக்கம்   நம் மனதில்   பிறக்கட்டும் இதயம்   இசையில்   மயங்கட்டும் இருபுறச்   செவிகள்   கேட்கட்டும் இறக்கை   இரண்டு   முளைக்கட்டும் இருகை   கொண்டு   பறக்கட்டும் இமயமென   உயர்ந்த   மலைகளை இரவினில்   ஒளிரும்   நிலவினை இலைகள்   தாங்கும்   மரங்களை இரவிக்கு ஏங்கும் மலர்களை இருளினில்   ஓங்கும்   கடல்களை இறக்கை   விரிக்கும்   பற...