இனிய புத்தாண்டு -- 2018



              இனிய  புத்தாண்டு  --  2018

புத்தாண்டின் வாழ்த்துக்கள்

இன்பம்   இங்கு  இன்று பொங்கட்டும்
இனிமை  எங்கும்  நன்று நிறையட்டும்
இனியன  மனதில் என்றும்   தங்கட்டும்
இல்லறம்  இனிதென  வாழ்வில்  சிறக்கட்டும்

இன்னாச்  சொல்  இன்று  விலகட்டும்
இனிய  சொல்  பிறகு  பிறக்கட்டும்
இடுக்கண்  இல்லாமல் மறையட்டும்
இரக்கம்  நம் மனதில்  பிறக்கட்டும்

இதயம்  இசையில்  மயங்கட்டும்
இருபுறச்  செவிகள்  கேட்கட்டும்
இறக்கை  இரண்டு  முளைக்கட்டும்
இருகை  கொண்டு  பறக்கட்டும்

இமயமென  உயர்ந்த  மலைகளை
இரவினில்  ஒளிரும்  நிலவினை
இலைகள்  தாங்கும்  மரங்களை
இரவிக்கு ஏங்கும் மலர்களை
இருளினில்  ஓங்கும்  கடல்களை
இறக்கை  விரிக்கும்  பறவைகளை
இவ்வுலகில்  வாழும்  உயிர்களை
இனிது  பார்த்து   எல்லோரும்
இன்றே  ரசிக்கப்  பழகுவோம்.
இயற்கை  மகிழ்ந்து  சிரிக்கட்டும்
இந்தியா  உலகில்  சிறக்கட்டும்

புத்தாண்டின் சபதங்கள்

இலவசம் வழங்குவதும், வாங்குவதும்
இனி வேண்டாம் வேண்டாம் என்போம்
இருப்பவர்கள்  இருப்பதை, எளியவர்க்கு
இல்லையென  சொல்லாமல் கொடுப்போம்
இந்த   லஞ்சத்தை  இன்று  பழித்திடுவோம்
இடர்  பஞ்சத்தை  என்றும் ஒழித்திடுவோம்
இரப்பது  என்பது  இந்தியாவில்  இனி
இல்லை  இல்லை என்று முழங்குவோம்
இரந்துண்டு  வாழ்வோர்க்கு  நாம் அவர்
இனி  போதும் போதும் என சொல்ல, 
இறுமாப்பு ஏதுமின்றி   வழங்குவோம்
இனிய  உளவாக   இன்றிலிருந்து  நாம்
இன்னாது  கூறாதிருப்போம்
இன்னா  செய்தார்க்கு    இன்றிலிருந்து நாம்
இனி  நன்மையே  செய்வோம்.
இல்லதென்  இல்லவள்  மாண்புடை
இல்லத்தில்  உறவை  என்றும்  மதிப்போம்.

இரு  உள்ளம்  காதலால்  கனிந்து, மகிழ்ந்து
இணைவதை இனி    தடுப்பாதிருப்போம்
இயல்பாக  சாதி,  மதங்களை  நாம்  இல்லை,
இனி  இல்லையென  உறுதிபடச்  சொல்லுவோம்
இளைஞர்கள்,    முதியவர்களின்  இனிய அன்பை
இன்று முதல்  என்றும்  மதித்து நடப்போம்

இளைஞர்கள்   கல்வியில்  கேள்வியில் உயரவும்
இந்தியாவின்  பெருமையை   உலகம்  உணரவும்
இத்தமிழின்,  முத்தமிழின்  அருமையை  தமிழர்
இத்தரணியெங்கும்   கொண்டு   செல்லவும்.
இனிய  தமிழ்  வாழவும்,  தமிழ்நாடு  வளரவும்
இன்று  எடுப்போம்  எல்லோரும்  ஒரு  சபதம்!

வாழ்த்துக்கள்                            வணக்கம்

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், உறுப்பினர், நிறை நிலா மன்றம்
கே.கே.புதூர், கோயம்புத்தூர் 641 038  98941 87627
Please visit: www.myiniyatamil.blogspot.in




Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE