குடியரசு தினம் -- 2018
குடியரசு தினம் --
2018
இந்திய நாட்டின் விடுதலை
வாங்கித் தந்த
ஆத்மா, மகாத்மா காந்தி
என்பதை அறிவோம்
இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவர்
இராஜேந்திர பிரசாத்
என்பதை
அறிவோம்.
இந்தியாவின் முதல் பிரதம
மந்திரி
குழந்தைகளை நேசித்த, ரோஜாவின் ராஜா
ஜவஹர்லால் நேரு என்பதை
அறிவோம்.
ஒன்று பட்ட இந்தியா
உருவாகியது,
உருவாக்கியது
சர்தார் வல்லபாய் பட்டேல்
என்பதை
அறிவோம்
பார்வையில் நேர்மை, பதவியில் தூய்மை
வாழ்ந்து மறைந்த தமிழ்
நாட்டின் முதல்வர்கள்
ஓமந்தூரார், காமராசர்
என்பதை
அறிவோம்
ஏழைகளுக்கும் கல்வி எளிதாக உண்டு,
மதிய உணவு உண்டு என்று சொன்னவர்,
செய்தவர் காமராசர் என்பதை அறிவோம்
மதிய உணவு உண்டு என்று சொன்னவர்,
செய்தவர் காமராசர் என்பதை அறிவோம்
சாதி இல்லை, மதமும் இல்லை, மூட நம்பிக்கை
ஒரு போதுமில்லை என்று
உரக்கச் சொன்னவர்,
தந்தை பெரியார்
என்பதை
அறிவோம்
உலகத் தமிழ் மாநாடு நடத்தி,
தமிழுக்குப்
புகழ் சேர்த்தவர், உலகம் அறியச் செய்தவர்
அறிஞர் அண்ணா என்பதை அறிவோம்
கல்வி கற்க வரும் அனைத்து
குழந்தைகளும்
வயிறார உண்டு மகிழ, சத்துணவு அளித்தவர்
தலைவர் எம் ஜி ஆர் என்பதை அறிவோம்
தாயின் மணிக்கொடி பாரீர்,
தாழ்ந்து பணிந்திட
வாரீர்
என்று அழைத்தவர் பாரதியார்
என்பதை அறிவோம்
இந்தியா வேண்டுவது:
பெற்ற சுதந்திரம் பேணிக்
காக்க நாட்டில்
உண்டு நல்ல பல
திட்டங்கள் – நாட்டுப்
பற்றற்ற சிலரிடமிருந்து குடியரசு
காக்க
வேண்டும் நல்ல பல
திட்டங்கள்!
குடியரசு தின வாழ்த்துக்கள்! வணக்கம்! கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894187627
Comments
Post a Comment