இலக்கிய விழாவில் --வரவேற்புரை –


     
நிறை நிலா மன்றம் 10.02.2018 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் திரு சைவமணி கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு வரவேற்புரைகே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
               
                                                      தேவாரம்

மும்மூர்த்திகள்  பாடிய பாடல்கள்
தே வாரம்;  
தேவாரப் பாடல்கள் பாடினால்
மனதில் கேட்பது
ஆர வாரம்.
பன்னிரு திருமுறைகளில்
முதல் மூன்று திருமுறைகள் பாடியவர்
ஞானசம்பந்தர்;
அடுத்த மூன்று திருமுறைகள் பாடியவர்
நாவுக்கரசர்.
ஏழாவது திருமுறை பாடியவர்
எம்பெருமான் சுந்தரர்.
தேவாரப் பாடல்கள் நாம்  பாடும்  போது
நாம் நா இனிக்கும்;
தேவாரப் பாடல்கள் நாம் கேட்கும்  போது
நம் மனது இனிக்கும்.
பாடல்கள் உடல் என்றால் இசை அந்தப்
பாடல்களுக்கு உயிர்.

திரு சைவமணி கந்தசாமி ஓதுவார்
நிறை நிலா மன்றம் சபையின் முன்
பாடல்களை ஓதுவார்;
பக்திப் பாடல்களை ஓதுவார்;
மும்மூர்த்திகள் பாடிய தேவாரப்
பக்திப் பாடல்களை ஓதுவார்;
இறைவனின் புகழை ஓதுவார்;  
பிறை நிலா அணிந்த அந்தப் பித்தனின்
திரு விளையாடல்களை ஓதுவார்;  
குறையிலா வண்ணம் தோடுடைய
செவியனின் பெருமைகளை ஓதுவார்;  
நிறை நிலா என்று நம் மனது
நிறையும் வரை ஓதுவார்.

அன்னை சிவகாமியுடன் ஆனந்த நடனமிடும்  
தில்லை நடராஜனைப்  போற்றி ஓதுவார்; 
ஆடல் வல்லான் தில்லைக் கூத்தனின்
திரு நடனம் வியந்து பலமுறை ஓதுவார்.
ஆண் பெண் சமம் என்று அகிலம் உணர
அர்த்த நாரீஸ்வரர் அவதாரம் பற்றி ஓதுவார்

வலை வீசி மீன் பிடித்து, கண்களால்
வலை வீசி  மீனவ  மகளைப் பிடித்து,
சிவன் மணந்த கதையை ஓதுவார். 
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பித்தனின் கருணையை ஓதுவார்;
அகிலம் சிறக்க, அனைத்து உயிர்களும்
பிழைக்க ஊர்த்தவ தாண்டவமாடும்
உத்தமனை வாழ்த்தி  ஓதுவார்;

திரு சைவமணி கந்தசாமி ஓதுவார் அவர்களை
வருக வருக என்று எல்லோரும் இரு கரம் கொண்டு
ஒலி எழுப்பி வரவேற்போம்.

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE