கோயம்புதூர்  கே . கே . புதூர்  பார்க்  முன்பு  15.8.2017 அன்று  தேசீய  கொடி  ஏற்றும்  விழாவில்  படித்த  கவிதை  – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன்     ஆடுவோமே , பள்ளு  பாடுவோமே    ஆனந்த  சுதந்திரம்  அடைந்து  விட்டோம்  என்று   ஆடி  மகிழச்  சொன்னார்  பாரதியார்    எப்போது?   சுதந்திரம்  கிடக்கும்  முன்பு !   பாரதியைவிட  ஒரு  தீர்க்கதரிசி,     வேறு  யார் ?     பாரதியின்  பாடல்கள்,   பாமாலை   பைந்தமிழுக்கு  அது,   பூமாலை .   வீரமிக்க  பாடல்கள் , சுதந்திர    தாகமிக்க  பாடல்கள் .   இத்தனைப்  புரட்சிப்  பாடல்களை   இந்தியாவில்  எவரும்  பாடியதில்லை   பாடல்களில்   இத்தனை  வீரம் , இத்தனை  துணிச்சல்   இந்தியாவில்  எவருக்கும்  இருந்ததில்லை ’     தன்னலமற்ற  தலைவர்கள்  அதிகம்  அன்று   தன்னலமிக்க  தலைவர்கள்  அதிகம்  இன்று .   வீட்டை  மறந்து  நாட்டைக்  காத்திட்ட   தலைவர்கள்  – அன்று   நாட்டை  மறந்து  வீட்டைக்  காக்கும்   தலைவர்கள்  – இன்று .     பெற்ற  சுதந்திரம்    பேணிக்  காத்திடவும்   நாட்டிலும் , வீட்டிலும்    நல்லது  நடந்திடவும்   நல்ல  பல  தலைவர்கள்    நமது  நாட்டில்  தோன்...