கோயம்புதூர் கே.கே.புதூர் பார்க் முன்பு 15.8.2017 அன்று தேசீய கொடி ஏற்றும் விழாவில் படித்த கவிதைகே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடி மகிழச் சொன்னார் பாரதியார்
எப்போது?
சுதந்திரம் கிடக்கும் முன்பு!
பாரதியைவிட ஒரு தீர்க்கதரிசி,  
வேறு யார்?

பாரதியின் பாடல்கள்,  பாமாலை
பைந்தமிழுக்கு அது,  பூமாலை.
வீரமிக்க பாடல்கள், சுதந்திர
தாகமிக்க பாடல்கள்.
இத்தனைப் புரட்சிப் பாடல்களை
இந்தியாவில் எவரும் பாடியதில்லை
பாடல்களில்
இத்தனை வீரம், இத்தனை துணிச்சல்
இந்தியாவில் எவருக்கும் இருந்ததில்லை

தன்னலமற்ற தலைவர்கள் அதிகம் அன்று
தன்னலமிக்க தலைவர்கள் அதிகம் இன்று.
வீட்டை மறந்து நாட்டைக் காத்திட்ட
தலைவர்கள்அன்று
நாட்டை மறந்து வீட்டைக் காக்கும்
தலைவர்கள்இன்று.

பெற்ற சுதந்திரம்  பேணிக் காத்திடவும்
நாட்டிலும், வீட்டிலும்  நல்லது நடந்திடவும்
நல்ல பல தலைவர்கள்  நமது நாட்டில் தோன்றிடவும்
நாட்டில் அனைவரும் நலமுடன் வாழ்ந்திடவும்
சாதி, மத வேறுபாடுகள் அறவே அழிந்திடவும்
வறுமை என்பது முற்றிலும் ஒழிந்திடவும்
நம் நாடு
வல்லரசாக வேண்டாம்அது நம்மைப்
போருக்கு அழைத்துச் செல்லும்
நல்லரசாக இருந்தால் போதும்அது நம்மை
நல் வாழ்விற்கு அழைத்துச் செல்லும்

எத்தனை தலைவர்கள்? எத்தனை தியாகங்கள்?
அவர்கள் அனைவரும்
தீரமிக்க மனதினர், வீரமிக்க செயலினர்.
அத்தனை பேரையும், அவர்களின் பெயரையும்
அறியவல்லார் யார் இன்று?
 எனவே
அவர்கள் அனைவரையும்
மனதில் நினைத்து, நினைவில் நிறுத்தி
மூவர்ணக் கொடியை
வணங்குவோம் இன்று
வரிசையில் நாம் நின்று!

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE