கண்ணன் பக்திப் பாடல் - பாடியவர் வீரமணி
கண்ணன் பக்திப் பாடல் - பாடியவர் வீரமணி
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல் கேட்டு
கண்ணன் வந்தான்.
மாதவப் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஓதிய மொழி கேட்டு கண்ணன்
வந்தான்.
வாரணம் அணியாக வலம் வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன்
வந்தான்.
மார்கழிப் பனி நாளில் மங்கையர் இடந்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்.
ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமித் திதி பார்த்து
கண்ணன் வந்தான்.
அந்தியில் இடம் மாறி சந்தியில் முகம் மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன்
வந்தான்.
பொன் மகள் பாஞ்சாலி பூங்குயில் தனைக்காக்க தென்றலின் வடிவாக
கண்ணன் வந்தான்.
போர்முகப் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன்
வந்தான்.
ஏழைக் குசேலனுக்குத் தோழமை தான் தந்து
வாழ வைப்பேன் என்று
கண்ணன் வந்தான்.
வாழிய பாடுங்கள் வலம் வந்து தேடுங்கள்
வந்து நிற்பான் அந்தக் கண்ணன்
என்பான்.
Comments
Post a Comment