பெண் உரிமை - ஒரு வேண்டுகோள்
பெண் உரிமை - ஒரு வேண்டுகோள்
பெண்களுக்கு உரிமை வேண்டும்
என்பதில் இருவேறு எண்ணமில்லை!
ஆனால்
பாதி உரிமை கேட்கும் பெண்கள்
எடுப்பதோ முழு உரிமை!
முழு உரிமை எடுப்பதோ,
கொடுப்பதோ என்பது
இரு புறம் கூரிய கத்தியை
சிறு குழந்தை கையில்
கொடுப்பது போல!
எந்த நேரம், யாரை அது
தாக்கும் என்பது
குழந்தைக்கும் தெரியாது!
கூரிய கத்தியைக்
கொடுத்தவர்க்கும் தெரியாது!
கூரிய கத்தியைத்
திரும்ப வாங்கவும் முடியாது!
சம உரிமையைப் பெண்கள்
ஒருபோதும் மதிப்பதில்லை!
முழு உரிமை கிடைத்தபின்
யாரையும் மதிப்பதில்லை!
எப்படியென்றால்
வரம் கொடுத்தவன் தலையில்
கை வைப்பது போல!
நல்லது நடக்க வேண்டும் என்றால்
சம உரிமை மீறாமல் காப்பது
நல்லது என்பதை அறிவோம்.
ஏனென்றால்
நாட்டிலும், நமது வீட்டிலும்
நல்லது நடக்க வேண்டும்!
ஆதலினால்
அகிலத்தில் அதிக அன்புடன்
ஆடவரே செயல் படுங்கள்!
Super
ReplyDeleteThangam. Super
ReplyDelete