23.3.2023 அன்று நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா சன் தொலைக் காட்சியில் மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரை ஒளிபரப்பானது. மிகவும் பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். ஆனால் திரு சரத்குமார் பார்த்திபனுடன் பேசிய சில விஷயங்கள் பார்ப்பவர்களுடைய / கேட்பவர்களுடைய மனதை வருத்தும் வகையில் மிகவும் ஆபாசமாக இருந்தன.

1. இருவரில் யார் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்று  பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த பார்த்திபனுaம் பேசுகிறார்கள். அவ்வமயம் சரத்குமார் பார்த்திபனைப் பார்த்து “சின்ன பழுவேட்டரையரான நீ உலக அழகியான நந்தினியை மனதில்  அடைய விரும்பினாலும் அதை வெளிக் காட்டாமல் இருந்த உன் நடிப்புதான் சிறந்தது. “ என்கிறார். சின்னப் பழுவேட்டரையர் பற்றி திரு கல்கி ஒரு போதும் இது போல் எழுதியதில்லை. சரத்குமார் பேச்சு சின்னப் பழுவேட்டரையர் கதா பாத்திரத்தையே கேவலப்படுத்து வதாக இருந்தது.

 2. மறுபடியும் சரத்குமார் “ உலகப் பேரழகி ஐஸ்வரிய ராயைக் கட்டிப் பிடித்து நடிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்த திரு மணிரத்திணம் அவர்களுக்கு நன்றி “ என்றார். அந்தக் காட்சி நடிப்புதானே? இவர் வேறு எப்படி நினைத்தார்?  இவர் இப்படி பேசியது ஐஸ்வரியராய்க்கு சங்கடமாக/ நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு அருவருப்பாக இருந்திருக்குமல்லவா? இவர் போல எந்த ஒரு நடிகரும் ஒரு நடிகையுடன் நெருங்கி நடித்ததற்கு இயக்குனருக்கு நன்றி சொன்னதில்லை. நல்ல வேளை திரு கல்கி அவர்கள் உயிருடன் இல்லை. பொன்னியின் செல்வன் கதையைப் பல ஆண்டுகளாக படித்து வரும் இரசிகர்களுக்கு சரத்குமார் பேசியது வேதனையளித்தது என்பது உண்மை.

 பொது இடத்தில் சரத்குமார் இந்த இரண்டு ஆபாசமான பேச்சுக்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றும் நண்பர்களுடைய கருத்து.

வணக்கம். வாழ்த்துகள்.   கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  25.4.2023

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE