தமிழர் பெருமை - பகுதி 1
தஞ்சை பெரிய கோயில் – இராஜ ராஜ சோழன்

    விண்ணின்று பெய்யும் மழை

           கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
                         கிருஷ்ணா பதிப்பகம்                     ரூபாய்: 5










ஆஞ்சனேயர் பாடல்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

                                                    -  கம்ப ராமாயணம் 

அஞ்சிலே ஒன்று பெற்றான், இராமர் சீதையை
நெஞ்சிலே நன்று வைத்தான். இராவண வதை வரை
துஞ்சலை விழி மறந்தான், அஞ்சலை வழி மறந்தான்
அஞ்சனை பெற்ற செல்வன், ஆஞ்சனேய வள்ளலவன்!
       
                                             - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

     












              



                        தமிழர் பெருமை ( 1 )


           தஞ்சை பெரிய கோயில்      –  இராஜ ராஜ சோழன்
           கங்கை  கொண்ட  சோழபுரம்   -    இராஜேந்திர  சோழன்

                                            
காவிரி ஆறு

குடகில்  தோன்றிகாவிரி  என  பெயர்  பெற்று 
வழியெல்லாம்  வளம்  தந்து
நதியாகிஆறாகிஅருவியுமாகி
 நட்ட பயிரெல்லாம் செழிக்க
ஓடி வரும்ஆடி வரும்   அழகெல்லாம்  
கூடி  வரும்  நாடி   வரும்   மாந்தரெல்லாம்
பாடி  வரும்   காவிரியில்   நாளெல்லாம் 
குளிக்க  வரும்அந்தக்  காவிரி 
இருப்பது   தஞ்சை வள பூமியிலே!

எழில்  மரங்களும்குயில்  குரல்களும்,
கழல்  ஒலிகளும்வளை  ஓசைகளும்,
சிலை   எழில்களும்ஒலி   நயங்களும்,
மயில்  நடங்களும்மலர்த்  தடங்களும்,
மலர்ச்  செடிகளும்மண மலர்களும்,
பயிர்  நடுவதும்களை  எடுப்பதும்,
பயிர்   வளர்வதும்பயன்   தருவதும்,
உயர்   மலைகளும்உயிர்   இனங்களும்,
கதிர்   எழுவதும்   மதி  மறைவதும்
இயைந்ததும்   பின்  அமைந்ததும்
இயற்கையாய்  காவிரிக்   கரையினிலே!

காவிரி ஆற்றில்

இந்திர  விழா  உண்டு,   சந்திரன்  ஒளி   உண்டு.
ஆடவரும்   பெண்டிரும்  சிறுவரும் சிறுமியரும்
பண்பில் சிறந்தவரும், அன்பில் உயர்ந்தவரும்
செல்வம் இருப்பவரும் செல்வம் இல்லாதவரும்
வலியவரும் எளியவரும் வலிமையற்றவரும்
உழைப்பவரும் உழைப்பவர் உழைப்பில்
பிழைப்பவரும்
வறியவரும் வறியவரை வறுமையில்
ஆழ்த்தியவரும்
கற்றவரும்  கல்லாதவரும்,
உற்றவரும் உறவினர் பலரும் 
காவிரிப்   புனலாடமனமகிழ்ந்து  விளையாட 
ஆடிப்   பெருக்குண்டு!   கண்டு மகிழ
காட்சிகள் பல உண்டு. உண்டு மகிழ
பலவகை  சோறுமுண்டு!

        காதல் திருமணம் --  தமிழர் பண்பு

களவொழுக்கம்  கற்பொழுக்கம்  என்று   
காதலுக்கு  இரு வேறு  ஒழுக்கம்  உண்டு, என்று
உலகத்திற்கு  உரக்கச்  சொன்னவர்  தமிழர்.
காதல்   கை கூடும்   திருமணம்   களவொழுக்கம்.
உறவு   கை கூடும்  திருமணம்  கற்பொழுக்கம்.
இதில்  கட்டாயத்   திருமணம்   இல்லவே   இல்லை.

காவிரிக்  கரையினிலே  --  கண் கவரும் காட்சி ஒன்று!

ஆழகிய தடாகம் -   தடாகத்தில் 
தாமரை  மலர்கள் 
பூத்திருக்கின்றன.    அதில்
தேனருந்த வண்டுகள்
காத்திருக்கின்றன. 
கரையில் மான்கள்   துள்ளி  
விளையாடுகின்றன. 
அலையில்  மீன்கள்  நீந்தி
விளையாடுகின்றன.

மாலை  மறைந்து  உடன்
இரவு   வரும்   நேரம்,-  முழு
நிலவு வரும் நேரம் மழை   
பொழிய வரும்  நேரம்.  மலர்கள் 
சிரித்திருக்கும்  நேரம்

பௌர்ணமி  என்ற  நிறை நிலா 
ஒளிர்கிறது.
உயிரினங்கள் உடலெல்லாம்
குளிர்கிறது.
வானத்தில் பறவைகள் இன்னொலி
கேட்கிறது.
விண்ணில்  விண்மீன்கள்  எங்கும்
நிறைகிறது.
தலைவனைத்  தேடி  
தலைவி  வருகிறாள்.
தடாகத்தின்  தண்ணீரில்
தன்  முகம்  பார்க்கிறாள்

தலைவியின்  
தங்க  முகம்  வெண்ணிலவாய்
நெற்றி  பிறை  நிலவாய்,
கருங்  கூந்தல்  மேகமாய்,  
விழிகள்  குவளை  மலர்களாய்
கண்களின்  இரு கருமணிகள் 
கரு நிற வண்டுகளாய்,
புருவங்கள்   இரண்டும்   
நாணேற்றும் விற்களாய்,
கண்கள் இரண்டும்
கூரிய அம்புகளாய்
நீண்ட   நாசி   எற்பூவாய்,
கழுத்து   வெண்ணிற   சங்காய்
சிறுத்த இடை மேலிரு எழில்களாய்
நடந்த அவள் நடைமிகு ஒய்யாரமாய்!

தலைவியைப் பார்த்ததும்,
மயில்கள்  மகிழ்ந்து  ஆடின
குயில்கள்  கூவிப்  பாடின,
மலர்கள்  விரிந்து  சிரித்தன
மரங்களும்  காற்று  வீசின.
அன்னம்  இரண்டும்  ஒதுங்கி 
நடந்தன -  அவள்
கன்னம்  இரண்டும்   மகிழ்ந்து
சிவந்தன.

தலைவன்  வந்தான்.  
தலைவியைப்  பார்த்தான்.
தலைவியும்  தலைவனை
தன் விழியால் பார்த்தாள்.
வியந்தாள் தலைவி இவன் ஒரு
மன்மதனோ என்று
பயந்தாள் உடனே, சென்றது
தன்மனதோ என்று

உயர்ந்த உருவம், விரிந்த மார்பு
அகண்ட தோள்கள் நீண்ட கரங்கள்,
உறுதி மிக்க  கால்கள்
நெற்றியில் சுருளும் கேசம்
புன்னகை உதடுகள்  சிந்தும்
கண்களில் இருப்பதோ காந்தம்
பெண்களில் வருவதோ நாணம்
தனக்கென பிறந்த தலைவன் இவனே
என்று எண்ணினாள்  - உடன்
நாணம் பண்ணினாள்!

தலைவன் சொல்கிறான்

உன் ஒரு பார்வை எனக்கு நோயாகும்
உன் மறு பார் வை எனக்கு மருந்தாகும்.
உன் விழி அழகு, விழி சொல்லும்
மொழி அழகு. சற்றே தலை சாய்த்து
நீ பார்ப்பதுவும் அழகு, கற்றைக்
கூந்தல் தவழும் உன் தோளும் அழகு,
வில்லென வளைந்த உன்னிரு
புருவங்கள் அழகு,
அம்பென அமைந்த உன்னிரு
விழிகளும் அழகு. பெண்ணே யார் நீ?
உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்?
என்ன தவம் செய்தனர் அவர்
உன்னைப் பெற்றெடுக்க?
என்ன தவம் செய்தேன் நான்
உன்னைக் கண்டெடுக்க?

தலைவி கூறுகிறாள்

ஏழு பிறவி என்று சொல்வதுண்டு
எந்தப் பிறவியில் நாம் சந்தித்தோம்?
இந்தப் பிறவியில் நாம் சிந்திப்போம்!
உறுதியாகச் சொல்கிறேன்
கடந்த பிறவியெல்லாம் சந்தித்தோம்!
வரும் பிறவியெல்லாம் சந்திப்போம்.

தலைவன், தலைவியின்
இருமனம் அங்கே  
இணைந்தது -  இனிய
திருமணம் அன்றே  
நிகழ்ந்தது.

காவிரி   ஆற்றில்

வெள்ளம்   பெருகட்டும்மக்கள்  
உள்ளம்   மகிழட்டும்!    மனதில்
உயர்வு   தோன்றட்டும் செயலில்   
உன்னதம்   வளரட்டும். உலகில்
தீமைகள் அகலட்டும், உடன்
தீய எண்ணங்கள் அழியட்டும்!
நன்மைகள் பெருகட்டும்,    இந்த
நானிலமே   செழிக்கட்டும்!

தஞ்சை பெரிய கோயில்:  இராஜராஜசோழன்  

தோன்றிய  உயிர்களெல்லாம் 
அழிவது  விதியின்   முடிவு
அழிவில்   தோன்றுவது   புதுமை
அழிவும்  உலகில்  அவசியம்  என்று 
அகிலம்   புரிந்தது   உண்மை!
அழிக்கும்   ஆண்டவன்   சிவனேஅவன்
 இருப்பதுவும், அந்த   ஆலயம்  
இருப்பதுவும்     தஞ்சையிலே!

வானுயர்ந்த  மாளிகை  இல்லை மன்னனுக்கு !
வானுயர்ந்த  ஆலயம்  உண்டு  சிவனுக்கு !
வானுயர்ந்தது  கோபுரம்  தமிழுக்குப் பெருமை
தானுயர்ந்தது   தமிழனின்  தன்னிகரில்லாப் பெருமை

இரு நானூற்றுப் பதினாறடி 
கோபுரம் உயர்ந்தது.
இணையில்லாத்  தமிழனின்
புகழும் உயர்ந்தது.
கோபுரத்தின் எழில் காணவும்
புகழ் பேசவும் இரு விழிகளும்
ஒரு நாவும்  ஒரு நாளும் போதாது

உருவில் உருண்ட கல் ஒன்று
எண்பது டன்  எடை கல் அன்று
கோபுரத்தின் உயரத்தில், உச்சியில்
எங்ஙணம் சிந்தித்தனர் ?
எப்படி அமைத்தனர் ?
அற்புதம், மிகவும் அற்புதம் !
காண்பவர்களின் 
உள்ளம் கவர்ந்தது. இந்த
உலகம் வியந்தது !

எண்ணிலடங்கா,  எடையிலடங்கா
கிரானைட் கற்கள் பல பல கொண்டு,
சிறந்த  சிற்பிகள் பலரும் கொண்டு 
கைகளில் சிறு சிறு  உளி கொண்டு
மனதில் மிகப் பெரு களி கொண்டு
சிற்பிகள் வடித்த சீர்மிகு  சிலைகளும்
சிங்காரக் கலைகளும் அழகில் சிறந்தன!.  
ஆனந்தம், ஆனந்தம்! ஆனந்தம்!
அந்த அற்புதங்கள்
சொல்லில் அடங்காது .
சொன்னால் விளங்காது.
உருவில்  பெரிய சிவலிங்கம்,
முன்னே அமைந்த பெரு நந்தி
கண்கள் நிறைந்த காட்சி! இரு
கண்கள் கொள்ளாக் காட்சி!

ஆயிரம்   ஆண்டுகளாயினும்   ஆலயத்தின்
அழகு   குறைந்ததில்லை !
ஆயிரம்   ஆண்டுகளாயினும்   அந்தரசனின்
புகழ்   மறைந்ததில்லை !
இதற்கு   இணையான   ஆலயம்  
அகிலத்தில்  வேறு எங்கும்  இல்லை !

மாமன்னன் இராஜ ராஜ சோழன் - வீரம்

படைகள் திரட்டினான், வீரம் கூட்டினான்.
படையெடுத்துச் சென்றான் மாமன்னன்!
வெற்றி! வெற்றி! வெற்றியின் முழக்கம்!
மன்னன் சென்ற திசையெல்லாம் வெற்றி!
மேல்திசை நாட்டின் காந்தளூர்ச்சாலை
கொல்லம் நாடு,  குடகுமலை நாடு,
கீழ்த்திசை நாட்டின் பழந்தீவு பன்னீராயிரம்
வடதிசை நாட்டின் வேங்கை நாடு,
இரட்டபாடி நாடு, கலிங்க நாடு
தென்திசை நாட்டில் பாண்டிய நாடு
எல்லாம் வென்றான் மாமன்னன்
எல்லாப் புகழும் தான் கொண்டான்

கப்பல்கள்   கட்டினான்கடற்படை  
கூட்டினான். கடலோடி   சென்றான்
சிங்களம் சென்றான், வென்றான்.
மாலத்தீவு சென்றான், வென்றான்.
மும்முடிச் சோழன் என்ற பட்டம் வென்றான்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில்
- இராஜேந்திர சோழன்

தந்தை வழியில் தனயனும்
ஆலயம் அமைத்தான் சிவனுக்கு
கங்கை கொண்ட சோழபுரத்தில் !
அந்தக் கோயிலின் கோபுர உயரம்
தஞ்சையை மிஞ்சாது – தந்தையின்
புகழினையும் விஞ்சாது.

புனித நீர் வந்தது கங்கையிலிருந்து 
பொற்குடங்களில்
அபிஷேகம் நடந்தது  கோயிலின் சிற்ப
கற்சிலைகளில்
சோழ கங்கை என்ற பொன்னேரியில்
கங்கை நீர் கலந்தது
கோயிலின் சிங்க முகக்கேணியிலும் 
கங்கை நீர் கலந்தது
அந்தக் கிணறும் வற்றவில்லை
இன்றுவரை.
கங்கை கொண்ட சோழபுரீஸ்வரருக்கு
இன்று வரை
அபிஷேகம் நடக்கிறது
ஆராதனை நடக்கிறது
அந்த அதிசயம் நிகழ்கிறது
இந்த அகிலம் வியக்கிறது

இராஜேந்திர சோழன் - வீரம்

மங்கையரை   வென்று  
மணம்  புரிந்த   மன்னர்  பலர்.
கங்கைவரை   சென்று  
களம்   கண்ட   மன்னர்  இவர்
இராஜேந்திர சோழன்!

பாண்டிய மன்னனின் உரிமையாம்  
மணிமுடியுடன் இரத்தின மாலை
கவர்ந்து சென்றான் இலங்கை வேந்தன்.
மன்னன் மகிந்தன். அவனைப் போரில்
வென்றான்; புறமுதுகிடச் செய்தான்!
புகழுடன் மீண்டும் தமிழகம் வந்தது, !
மணிமுடியும், இரத்தின மாலையும்!

கன்னட, இராஷ்டிரகூட மன்னர்கள்,
சாளுக்கிய,   கலிங்க   தேச மன்னர்கள்
இவர்கள் தேசமெல்லாம்   வென்றான்
அவர்களிடம் நேசமும் கொண்டான்.

வங்காள தேசம் சென்றான். மன்னர்  
மகிபாலனைப் போரில்   வென்றான்,
கங்கை கொண்ட சோழன் என்ற
பெரும் பெயரும் கொண்டான்.

அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி
வெற்றி கொண்டான் கடார மன்னன்,
துங்கவர்மனை. ஜாவா, சுமத்திரா,
கம்போடியா தீவுகள், அத்தனை நாடுகளும்
துணிவிழந்தன, மாமன்னனிடம் அடி பணிந்தன.
அதிகாரிகளை  நிறுத்தினான் அங்கு,  தன்னுடைய
அதிகாரத்தை செலுத்தினான் பின்பு!

இத்தனைக்   கீழ்த்திசை   நாடுகளை
வெற்றி   கொண்ட   மன்னர்கள்   
எத்திசையும் இருந்ததில்லை  
இந்தியாவில், நம் இந்தியாவில்!
      
ஆயிரமாயிரம்   ஆண்டுகள்   ஆனாலும்  
 நிலைக்கட்டும்  
இராஜ ராஜ சோழன்   புகழ்! 
ஆயிரமாயிரம்   ஆண்டுகள்   ஆனாலும்  
நிலைக்கட்டும் 
இராஜேந்திர சோழன்   புகழ்!
ஆயிரமாயிரம்   ஆண்டுகள்   ஆனாலும்  
நிலைக்கட்டும்  
தஞ்சைப்  பெரிய  கோயில்  புகழ்!   
ஆயிரமாயிரம்   ஆண்டுகள்   ஆனாலும்  
நிலைக்கட்டும் 
கங்கை  கொண்ட  சோழபுரம்  கோயில்  புகழ்.

வணக்கம். வாழ்த்துக்களுடன்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்    98941 87627




                   


                     விண்ணின்று பெய்யும் மழை        

இரண்டு நிமிடங்களில்
இன் கவிதை
இனிய தமிழ் மொழியில்
என் கவிதை

குடையொன்றும் தேவையில்லை
மழையில் நனையுங்கள்
என் கவிதை
மழையில் நனையுங்கள்
    
மழை இன்று பெய்யட்டும்   மனித  ,
மனம் நன்று மலரட்டும்!
மழை இங்கு பொழியட்டும்! நமது
மனம் நன்கு குளிரட்டும்!

மலர்கள்  மணம்  பரப்பி மலரட்டும்,
மழலைகள்  இதழ் திறந்து சிரிக்கட்டும்!.
பயிர்கள்  எல்லாம் தழைக்கட்டும்,
உயிர்கள்  எல்லாம் பிழைக்கட்டும்!.

ஆறுகள்  அகன்று பெருகட்டும்,
குளங்கள்  நிரம்பி வழியட்டும்!.
அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டட்டும்,
ஆனந்தம்  இருகைகள்  தட்டட்டும்!.

நிலமகள்  இன்று நனையட்டும்!
நினைவுகள்  நெஞ்சில் படரட்டும்!.
உலகம்  மிகவும் செழிக்கட்டும்,
உன்னதம்  உடனும்  உயரட்டும்!.

மின்னல் பளிச் சென்று மின்னட்டும்
இடி   தடதடவென ஒலிக்கட்டும் 
வானம்   இடியுடன் திறக்கட்டும்,
புதிய வையமின்று  பிறக்கட்டும்!.

மலைகளில் மழை பெய்யட்டும்
ஓடைகளில் வெள்ளம் ஓடட்டும்
அணைகளில் நன்னீர் நிரம்பட்டும்
அனைவரின் உள்ளம் மகிழட்டும்.

மழை இன்று பொழியட்டும்
இந்த மானில தூசகலட்டும்!
மழை நன்று பெய்யட்டும்,
மனித மனதின் தூசகலட்டும்!.

ஏழ்மை இங்கு அகலட்டும்
ஏழை இனிதே சிரிக்கட்டும்
பசிப்பிணி இன்று ஒழியட்டும்
பாரதம் பண்புடன் ஒளிரட்டும்

நல்லன  இன்றே தோன்றட்டும்
அல்லன  அன்றே  அழியட்டும்!
பஞ்சம் நாடுவிட்டு பறக்கட்டும்.
பாரதம் உலகில் சிறக்கட்டும்! 


கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
முதுநிலை மேலாலர் (ஓய்வு)
கனரா பாங்க்

98941 87627
Please visit www.myiniyatamil.blogspot.in.









































































கங்கை  கொண்ட  சோழபுரம்   -  இராஜேந்திர  சோழன்







Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE