பாரதி கண்ட புதுமைப் பெண்கள்



            பாரதி கண்ட புதுமைப் பெண்கள்
                                          K.S.கோபாலகிருஷ்ணன்    
இந்த நாட்டில் மகாத்மா காந்தி   என்ற
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
அகிம்சை ஒன்றே ஆயுதம் என்று சொன்ன
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
எளிமையே அடையாளம் என்று சொன்ன
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
இந்திய நாட்டின் விடுதலைக்கு வழி கண்ட
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
மதம் என்றும் கிடையாது என்று சொன்ன
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
சாதி என்றும் கிடையாது என்று சொன்ன  
நல்லவர் பிறந்த  நல்ல நாள்

தண்டி யாத்திரையில்  மைல்கள் பல நடந்த
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
ஒத்துழையாமை இயக்கப் புதுமை  கண்ட
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
தானும் தானிருக்கும் வீடும் சுத்தமாகச் சொன்ன
நல்லவர் பிறந்த  நல்ல நாள்
சுற்றமும் நட்பும் நாடும் சுத்தமாகச் சொன்ன
நல்லவர் பிறந்த  நல்ல நாள்.

கள்ளமில்லா உள்ளம் கொண்ட  குழந்தைகள்
துள்ளி விளையாடும் பூங்கா!  - அந்தப்  பூங்காவில்
குழந்தைகள்  ஆடவும், ஓடவும், பாடவும் காணும்
வரை நம்முடைய  கண்கள் தூங்கா !
ஏங்காத நாளில்லை  இரங்காத மனமில்லை
தடுப்பது யாரென்றும்  தெரியவில்லை  - அனுமதி
கொடுப்பது  யாரென்றும்  புரியவில்லை.

இன்று துணிந்து விட்டோம்  ஆண்களும் பெண்களும்
ஒன்று சேர்ந்து விட்டோம் - அதிரடியாக
சிறுவர் பூங்காவில்  நுழைந்து விட்டோம். !
சீர் படுத்த அங்கு நாங்கள் முடிவு கொண்டோம் !
இலைகளையும், தழைகளையும், கிளைகளையும்
ஒடித்து விட்டோம், பிறகு வெட்டி விட்டோம்
மக்கும் ஒரு குப்பை மக்காத  வேறு குப்பை என்று
எடுத்து விட்டோம் பிறகு பிரித்து விட்டோம்.!
ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் மறு பக்கம்
வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், நிமிர்ந்தும்
சுத்தம் செய்தைதைப் பார்க்கவும், அந்த அற்புத
செயல்களைப்  பற்றிப்  பேசவும் 
ஒரு நாவும்  ஒரு நாளும்  ஒரு போதும் போதாது.

பணம் கொண்டவர்களும் குணம் கொண்டவர்களும்
ஒன்றாக அங்கு நின்றார்; உறுதி மொழியும் கொண்டார்
வீட்டிலும், நாட்டிலும் குப்பைதனை சேரவிட மாட்டோம்
சுத்தம் என்றும் வேண்டும் என்று சத்தமுடன் சொன்னோம்.

சளைத்தவர்கள்  என ஒரு போதும் இல்லை நாங்கள்  !
இளைத்தவர்கள் என இல்லை ஆண்களுக்கு நாங்கள் !
பாரதி கண்ட அன்றைய புதுமைப்  பெண்மணிகள் என
சாதித்துக்  காட்டினர்  இன்றைய அருமைப் பெண்மணிகள் !

வாழ்க பெண்கள்!; வளர்க அவர்கள் சேவை,!
நல்ல சேவைகள்  நாட்டிற்கு என்றுமே தேவை !.


குறிப்பு: மகாத்மா காந்தி பிறந்த நாள் 2.10.2019 அன்று இராமலிங்க நகர் அசோஸியேசன், நிறை நிலா மனறம் – நண்பர்கள் இணைந்து சிறுவர் பூங்காவை சுத்தம் செய்த நிகழ்வு பற்றிய கவிதை.

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE