கருணை என்றால் என்ன ?
கருணை என்றால் என்ன ?
( இந்தக் கவிதை சிந்திக்க)
-- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
அன்று ஏசு இருந்தார்; ஒருவன்
ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னும்
ஒரு கன்னத்தைக் காட்டச் சொன்னார்
ஆனால்
எத்தனை முறை கன்னத்தைக்
காட்ட வேண்டும் என்று
சொல்லவில்லை !
இன்று ஏசு இருந்தால் ஒருவன்
ஒரு கன்னத்தில் அடித்தால்,
அடித்தவனின் இரண்டு கன்னங்களிலும்
துணிவுடன் மீண்டும் மீண்டும்
அடிக்கச் சொல்லுவார் !.
அன்று வள்ளுவர் இருந்தார்; ஒருவன்
இன்னா செய்தால் இனியவை என்றும்
செய்யச் சொன்னார் !.
ஆனால்
எத்தனை முறை இனியவை
செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை !.
இன்று வள்ளுவர் இருந்தால் ஒருவன்
இன்னா மீண்டும் மீண்டும் செய்தால்
இன்னா அவர்க்குத் துணிந்து செய் என்பார் !.
அன்று காந்தி இருந்தார்
எதிரிகளிடம் கருணை காட்டச் சொன்னார்
ஆனால்
எவ்வளவு காலம் அவரிடம் கருணை
காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை !.
இன்று காந்தி இருந்தால்
கருணை சிறிதும் இல்லா எதிரிகளிடம்
கருணை சிறிதும் தேவை இல்லை என்பார் !
நல்லவர்கள் என்று தெரிந்தும் அவர்களை அலட்சியப்படுத்தியவர்களும், வேண்டுமென
அவமானப்படுத்தியவர்களும் அவர்
மனம் நோக
வருத்தப்படச் செய்தவர்களும், இன்று
கருணை வேண்டி இறைவன் முன்பு
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கட்டும்.
ஒரு வேளை
கருணையுள்ள இறைவன் மனமுவந்து
அவர்களிடம் கருணையும் காட்டலாம்;
அவர்களை மன்னிக்கவும் செய்யலாம்.
இல்லையேல் அந்த இறைவன், அந்தக்
கருணையற்றவர்கள், கல் நெஞ்சுக்காரர்கள்
கருணையைத் தன்னிடம் ஒரு போதும்
எதிர்பார்க்க முடியாது என்றும் சொல்லலாம்,
இறைவன் திரு உள்ளம் அறிபவர் யார் ?
கோயம்புத்தூர்
25.8.2019
Comments
Post a Comment