1999 ல் கார்கில் போர்
1999 ல் கார்கில் போர் நடந்த
போது, திரு கிருஷ்ண கோபால் அவர்களின் புதல்வன் திரு பரணி சந்தர் தன்னுடைய நண்பர்களோடு
இணைந்து போருக்கு
நிதி திரட்டிய நிகழ்ச்சி
இந்தியத் திரு நாட்டிற்கு
விடுதலை கிடைத்து விட்டது, நமது அடிமை
விலங்கு உடைந்து விட்டது என்பது உண்மை !
விடுதலை உணர்வு கொண்டு விட்டோம்
என்பதும் உண்மை !
ஆனால்
பிரிந்து சென்ற நண்பர் எதிரியானார்
அந்த எதிரி கொண்ட பகை உணர்வுக்கு
விடுதலை இன்றும் கிடைக்கவில்லை
என்பதும் உண்மை !.
தாய் நாடு காக்க சென்ற நம் வீரர்கள்,
தன் மனதில் மலர்ந்த மனைவியையும்,
நெஞ்சில் நிறைந்த தம் மக்களையும்
பெற்றவரையும், உற்றவரையும்
பிரிந்தனர். தமது சிந்தனை மறந்தனர்.
தன்னலம் இன்று அவர்கள் துறந்தனர் !
பனியும் பனி சூழ்ந்த மலையும் கண்டும்
இருளும், இருள் சூழ்ந்த இரவும் இருந்தும்
நெஞ்சில் அவர் அஞ்சவில்லை, இரவில் அவர்
துஞ்சவில்லை, கண் தூக்கம் கொள்ளவில்லை !
எதிரியிடம் ஒரு போதும் அவருக்கு அச்சமில்லை
எதிரிகள் வந்தாலும் மனதில்
ஒரு துச்சமில்லை !.
இந்தியாவின் வட மேற்கில் ஒரு
நாள் எழுந்தது
வீரர்கள் கூட்டம் கார்கில்
போரென்று !
இந்தியாவின் தென் மேற்கில்
மறு நாள் எழுந்தது
கோவையில் மாணவர் கூட்டம் பாரென்று
!
என்ன செய்வது ஏது செய்வது என்றெல்லாம்
எண்ணாமல் எடுத்தனர் கையில், தூசி அகற்ற
பிரஷும் ! ஷூ பள பளக்க பாலிஷும் !
எதிரில் வந்தவரின் கால்கள் தொட்டனர்,
பாதங்கள் பிடித்தனர். பாலிஷ் போட்டனர்.
காலணிகளின் அழுக்கை அவர் அகற்றினர்
காலணிகளை அழகாகப் பின் மாற்றினர்
வந்தவர்களின் கால் தொட்ட இளைஞர்கள்
காண்பவர்களின் உள்ளம் தொட்டனர் !
கார்கில் போருக்கு நிதி தாரீர் என்றொரு
பதாகை கண்டதும், கண்டவர்கள் கண் கலங்க
காவியம் படைத்தவர்களின் கரங்களில்
காசுகளைக் கொடுத்தனர், மீண்டும் கொடுத்தனர்.
வள்ளுவரின் வாக்கு பலித்தது கண்டு ,
வந்தவர்களெல்லாம் மனம்
மகிழ்ந்து வாழ்த்த,
இந்த இளைஞர்களைப் பெற்றெடுக்க
பெற்றவர்கள் என்ன தவம் செய்தனர் என்று
எண்ணி, எண்ணி, சிந்தனையில்
எதுவும்
எண்ணாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தனர்.
பார்த்தவர்கள் பார்த்ததும் மனதில் பாராட்டுக்கள்,
கேட்டவர்கள் கேட்டதும் மகிழ்வில் வாழ்த்துக்கள்
!
இனி இந்தியா நல்லரசாகவும் வல்லரசாகவும்
வருவதற்குத் தடையேது என்ற எண்ணம் கொண்டு
பலரும் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தினார்கள் !
Comments
Post a Comment