Posts

Showing posts from August, 2019

கருணை என்றால் என்ன ?

                  கருணை என்றால் என்ன ?                       ( இந்தக் கவிதை சிந்திக்க)                                                           -- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அன்று ஏசு இருந்தார்; ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னும் ஒரு கன்னத்தைக் காட்டச் சொன்னார் ஆனால் எத்தனை முறை கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை ! இன்று ஏசு இருந்தால் ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால், அடித்தவனின் இரண்டு கன்னங்களிலும் துணிவுடன் மீண்டும் மீண்டும் அடிக்கச் சொல்லுவார் !. அன்று வள்ளுவர் இருந்தார்; ஒருவன்...

அலங்காரப் பதுமைகள்

                                     அலங்காரப் பதுமைகள்              “ கீதாக் கண்ணு , இன்னிக்கு சாயந்திரம் 5 மணிக்கு வந்திடம்மா , கோயம்புத்தூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க , 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான் , முகம் கழுவி , புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும் . மறந்து விடாதே ” , என்று அம்மா விடிந்ததிலிருந்து நாலாவது முறையாக சொல்லி விட்டாள் . இதோ , மணி 8.15 ஆகி விட்டது . இப்போது வீட்டிலிருந்து புறப்பட்டால்தான்   பஸ்ஸைப் பிடித்து , மதுரை டவுண் ஹாலி லிருக்கும் “ வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸ் ’ க்கு கீதா சரியாக 9 மணிக்குப் போய் சேர முடியும் . 10 நிமிடங்களில் ஆடைகளை மாற்றி விட்டு , சிறிது முக அலங்காரங்கள் செய்து முடித்த பிறகு , கடை வாசலில் தோழி கவ...

1999 ல் கார்கில் போர்

1999 ல் கார்கில் போர் நடந்த போது, திரு கிருஷ்ண கோபால் அவர்களின் புதல்வன் திரு பரணி சந்தர் தன்னுடைய நண்பர்களோடு இணைந்து போருக்கு நிதி திரட்டிய நிகழ்ச்சி இந்தியத் திரு நாட்டிற்கு விடுதலை   கிடைத்து விட்டது,   நமது அடிமை விலங்கு   உடைந்து விட்டது என்பது உண்மை ! விடுதலை உணர்வு கொண்டு விட்டோம் என்பதும் உண்மை ! ஆனால் பிரிந்து சென்ற நண்பர் எதிரியானார் அந்த எதிரி கொண்ட பகை   உணர்வுக்கு விடுதலை   இன்றும் கிடைக்கவில்லை என்பதும்   உண்மை ! . தாய் நாடு   காக்க சென்ற நம் வீரர்கள், தன் மனதில் மலர்ந்த   மனைவியையும் , நெஞ்சில்   நிறைந்த   தம்   மக்களையும் பெற்றவரையும் , உற்றவரையும் பிரிந்தனர். தமது சிந்தனை மறந்தனர். தன்னலம்   இன்று அவர்கள் துறந்தனர் ! பனியும்   பனி   சூழ்ந்த   மலையும் கண்டும்   இருளும் ,   இருள்   சூழ்ந்த   இரவும்   இருந்தும் நெஞ்சில்   அவர் அஞ்சவில்லை, இரவில் அவர் துஞ்சவில்லை, கண்   தூக்கம் கொள்ளவி...