வாடிய மரங்களும் வாடிய உள்ளமும்
வாடிய மரங்களும் வாடிய உள்ளமும்
அக நகும் நண்பர் ஒருவர்
அக மகிழ பூங்கா சென்றார்.
அங்கு,
பூத்திருக்கும் நறு மலர்கள்
காண !
காத்திருக்கும் கரு வண்டுகள்
காண !
பார்த்திருக்கும் பல பறவைகள்
காண !
வாய்த்திருக்கும் நல வளங்கள்
காண !
ஆனால் ஐயகோ ! மனம் பதற
வாடிய மரங்களைக் கண்டார்
வாடிய மனநிலை கொண்டார்.
உலர்ந்த இலைகள்;
தளர்ந்த கிளைகள்;
மணமில்லா மலர்கள்
பலமில்லா வேர்கள்
கண்ட காட்சியும் மரங்கள்
சொன்ன சாட்சியும்
கண்கள் கலங்கியதும்
நெஞ்சம் குலுங்கியது.
யார், இந்த மரங்களை வஞ்சித்தது
?
அந்த ஆண்டவனா ? அல்லது
அந்த ஆண்டவன் கண்ட
இந்த மானிடனா? இல்லை
விண்ணின்று பெய்யாத சிறு துளியா
?
கண்ணின்று இல்லாத ஒரு பழியா
?
ஏனிந்த செயலில்லா
வீண் பொழுது ஆராய்ச்சி ?
இதிலேனும் பலனுண்டா
சொல் தாயே மீனாட்சி !
கடவுளின் கருணை
மனிதனுக்குப் பெருமை !
தண்ணீரின் கருணை
மரங்களுக்கு அருமை !
அன்பில் தன் மனம் கசிந்த
அன்பரசின் கரங்களிலிருந்து
வெள்ளமெனப் பாய்ந்தது தண்ணீர்
!
கண் கொள்ளாக் காட்சி அது
கண்டவர் கண்களில் கண்ணீர்,
சொல்லக்
கேட்டவர் நெஞ்சில் பன்னீர்.
மழையெனத் தண்ணீர் ! மரங்கள்
தங்கள் தாள்களில் கண்டன !
தண்ணீர் கண்டதும், தண்ணீரை
மரங்கள்
தங்கள் வேர்களில் கொண்டன
!
வாடிய பயிர்கள் கண்ட
போது
வாடினார் வள்ளலார் அன்று
!.
வாடிய மரங்களைக் கண்ட
போது
வாடினார் அன்பரசு இன்று !.
பசித்தவன் வயிற்றுக்கு உணவு
அளிப்பது ஒரு செயல் !.
மரங்களின் தாகத்திற்கு தண்ணீர்
அளிப்பது ஒரு செயல் !.
முன்னதை விட பின்னது உலகில்
சிறந்தது அல்லவா?
மிகவும்
உயர்ந்தது அல்லவா?
ஏனென்றால்
மனிதனுக்குப் பேசத் தெரியும்;
மரங்களுக்குப் பேசத் தெரியாது!.
மரங்களிடம் அன்பு கொள்ள மனித
வழி காட்டுவோம் என்றார் அன்பு
!
மொழி கூட்டுவோம் நாம், அந்த
இனிய
தமிழ் கொண்டு, தமிழின் சுவை
கண்டு
அன்புடன் நண்பர் அன்பரசை இன்று
வாழ்க, வாழ்கவென வாழ்த்துவோம்
!
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment