யார் அந்த நாற்பது பேர் ?
                    யார் அந்த நாற்பது பேர் ?     கருவில்   சுமந்து,   பின் மடியில்     சுமந்த என் அன்னை !   உருவில் வளர்ந்து, பின் தோளில்   சுமந்த என் தந்தை !   என் மீது பாசம் கொண்டவர்கள்;   அளவிலா நேசம் கொண்டவர்கள் !   இவர்கள் இருவரையும்   நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு   நாடு காக்க எல்லை சென்றேன்.   என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.     பெண்ணுக்குரியப் பேரேழிலாள், இந்த   மண்ணுக்குரியப் பண்புடையாள்; அவள் என்   கண்ணுக்கினிய   காதல்   மனையாள் !   கட்டித் தங்கமென, சுட்டும் சுடர் விழியுடன்   தொட்டிலில் உறங்கும் எங்கள் குழந்தை !   இவர்கள் இருவரையும்   நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு   நாடு காக்க எல்லை சென்றேன்.   என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.     உற்றவர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள்   பெற்ற மண், அந்த மண் பெற்ற மரங்கள்,   செடி கொடிகள், இலைகள், மலர்கள்   நீந்தி விளையாடிய ஆற்று நீர், குளத்து நீர்   கிணற்று நீர், வாய்க்கால், வரப்பு,...