என்றும் வேண்டும் தைரியம்
என்றும் வேண்டும் தைரியம்
இருவரின் கண்கள் கலந்து கருத்து ஒருமித்து
இதயங்கள் இனிதாய் இடம் மாறி
இன்பங்கள் எளிதாய் பரிமாறி
கருவுற்றுப் பின் பத்து மாதங்கள் சுமந்து
மழலை ஒன்று சுகமாகப்
பெற்றெடுக்க
பெண்ணுக்கு இருப்பதுதான்
தைரியம் !.
இதுதான் இந்த ஆழி சூழ்
உலகத்தில்
மிகவும் சீரிய, சிறப்பான
தைரியம்.
எந்த ஆணுக்கும் இல்லாத,
ஒருபோதும்
இருக்க முடியாத தைரியம் !.
பிறந்த இடம், வளர்ந்த விதம்
உறவுகள் வேறாக இருந்தாலும்
புகுந்த வீட்டில் நல்ல பெயர்
என்றும் வாங்கும் தைரியம்
பெண்ணுக்கு இல்லாமல் வேறு
யாருக்கு உண்டு இந்த தைரியம்?
குழந்தை பிறக்கிறது; அழுகிறது;
தாயிடம்
பால் குடிக்கிறது. வேண்டுமல்லவா
தைரியம்?
தவழ்கிறது, அமர்கிறது; நிற்கிறது;
நடக்கிறது; ஓடுகிறது; வேண்டுமல்லவா
தைரியம்
குழந்தைக்கு யார் கொடுத்தது
இந்தத் தைரியம்?
ஆசிரியரிடம், நண்பர்களிடம், கேள்விகள்
கேட்கும் தைரியம் !
பாடங்கள் படிப்பதில், அந்தப் பாடங்கள்
சொல்வதில் தைரியம் !
மதிப்பெண் குறைந்தாலும் என்றும்
மனம் தளரா தைரியம்;
!
கேள்விகள் கேட்கும் தைரியம்
!
பதில் சொல்லும் தைரியம்.!
மனதில் பட்டதை மறைக்காமல்
எவரிடமும், எந்நிலையிலும்
தயங்காமல் கூறும் தைரியம் !
அழகான பெண்களின் கண்களைப்
பார்ப்பதில், பார்த்தபின் கண்களால்
பேசுவதில் தைரியம் ! அந்தப்
பெண்ணிடம் வாய் மொழி பேசுவதில்,
காதல் கொள்வதில் தைரியம் : மனதில்
கொண்ட காதலை மங்கையிடன்
துணிவுடன் சொல்லுவதில்
தைரியம் !,
பெற்றவர்கள் மனமறிந்து முறையாய்
தெளிவுடன் சொல்வதில்
தைரியம்,
திருமணம் செய்வதில் தைரியம்,
திருமணம் ஆனபின் வரும் முதலிரவில்
இருவரும் அறிமுகம் ஆவதில் தைரியம்
!
வேலை தேடுவதில் வேண்டும் தைரியம்
நேர்முகம் நேர் கொள்வதில்
வேண்டும் தைரியம் !
பணி அறிவதிலும், அதில் விளங்குவதிலும்
வினா கேட்பதிலும் வேண்டும்
என்றும் தைரியம்!
நல்லன சொல்வதில், செய்வதில்
என்றும் வேண்டும் தைரியம்!
தீயன அழிப்பதில், ஒழிப்பதில்
என்றும் வேண்டும் தைரியம். !
அறம் செய்வதில், அறம் சொல்வதில்
என்றும் வேண்டும் தைரியம்
!
இன்னாது இல்லாது இனியவை சொல்வதில்
என்றும் வேண்டும் தைரியம்
!
உண்மை உரைப்பதில், ஊழலை ஒழிப்பதில்
என்றும் வேண்டும் தைரியம்.!
இயற்கையைக் காப்பதில், அதன்
இளமையைக் காப்பதில்
என்றும் வேண்டும் தைரியம்
!
நதிகளைக் காப்பதில், நதியின்
வளமையைக் காப்பதில்,
என்றும் வேண்டும் தைரியம்
!
Comments
Post a Comment