மருமகள்
மருமகள்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
திருச்சியிலிருந்து
டிரான்ஸ்பரில் வந்து 2 மாதங்களாகிவிட்டன. அந்த வாரத்தின்
இறுதி
நாட்கள் முடிந்து,
திங்களன்று காலை டைனிங் டேபிளில் அமர்ந்து
டிபன் சாப்பிடும்
போது கார்த்திக்,
‘ என்ன பிரியா?
இன்று இட்லி
மிகவும் ருசியாக
இருக்கிறதே. மல்லிகைப் பூ போன்ற இட்லியை
இலையில் வைக்கிறதா,
இல்லை அந்தப்
பெண்ணின் தலையில்
வைக்கிறதா என்று
ஒரு திரைப்படத்தில்
காமெடி நடிகர்
சந்தாணம் கேட்பாரே,
இன்னைக்கு இட்லி
அவ்வளவு மிருதுவாக
இருக்கிறது. அந்த நாட்களில் எங்க அம்மா
இட்லி தயார்
பண்ணியது போலவே
இருக்கிறது.’ என்றான்.
“எப்போது
பார்த்தாலும் உங்க அம்மாவைப் பற்றி உங்களுக்குப்
பேசாமலிருக்க முடியாதே!. நாம் நேற்று இரவு
சினிமா, ஷாப்பிங்
போயிட்டு வரும்
போது, ஏதோ
ஒரு கடையில்தான்
இந்த இட்லி
மாவு வாங்கினேன்.”
இது பிரியா.
கார்த்திக்,
பிரியா தம்பதிகளின்
ஒரே மகன்
கணேஷ், ‘ அப்பா!,
அப்பா!, இந்த
இட்லி மாவு
பாக்கட் கவரில்
‘கார்த்திக் இட்லி மாவு’ என்று உங்கள்
பெயர் தான்
போட்டிருக்கிறது.’ என்றான்.
“அப்படியா?
என் பெயரா?
ஆச்சரியமாக இருக்கிறதே! கவரை இங்கே கொண்டு
வா, பார்க்கலாம்”
இது கார்த்திக்.
மகன்
கணேஷ் சொன்னது
உண்மைதான். ‘ கார்த்திக் இட்லி மாவு’ என்றும்
தயாரிப்பு ‘ மதுரை மரகதம்மாள்’ என்றும் மொபைல் எண்ணும் முகவரியும்
போட்டிருந்தது.
தன்னுடைய காதல்
திருமணத்திற்குத் தந்தை சம்மதம் தெரிவிக்க
வில்லை என்றதும், பெற்றோர்களூக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் பிரியாவைத்
திருமணம் செய்ததும், அதன் பிறகு தந்தை
இறந்த செய்தி
தாமதமாகத் தெரிந்ததால்
தான் சென்று
பார்க்கமுடியாமல் போய் விட்டதும். எங்கு தேடியும் அம்மாவைக்
கண்டு பிடிக்க முடியாமல் போனதையும் நினைத்துப் பார்த்துக்
கார்த்திக் கண்கள் கலங்குகிறான்.
தான்
இவ்வளவு வசதியாக
கார், பெரிய
வீடு என்று
இருக்கும் போது,
தன்னுடைய அம்மா
இட்லி மாவு
விற்று பிழைக்க
வேண்டியதாயிற்றே என்று கார்த்திக் வருந்துகிறான்.
உடனே
அம்மாவை அழைத்து
வர முடிவு
செய்கிறான். ஒருவேளை தன் மனைவி பிரியா
என்ன சொல்லுவாளோ
என்று நினைத்தாலும்,
ஒரு முடிவுடன், ‘பிரியா, கணேஷ் இருவரும்
இங்கே வாருங்கள்.
இதோ, இந்த
இட்லி மாவு
வாங்கியதன் மூலம் நாம் நீண்ட நாட்களாகத்
தேடிக் கொண்டிருந்த
என்னுடைய அம்மா
கிடைத்து விட்டாள்.
நாம் மூவரும்
சென்று உடனே
அம்மாவை அழைத்து
வருவோம் “ என்கிறான்
கார்த்திக்.
‘ நான்
இப்பவே ரெடி!.
வாங்க, உடனே போகலாம், உங்கள்
அம்மாவை, ஏன்
அவங்க எனக்கும்
அம்மாதான், அழைத்து வரலாம். உங்களைப் பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்த்துப்,
படிக்க வைத்து,
நல்ல
பிள்ளையாக, எனக்கு நல்ல கணவராகக் கிடைப்பதற்குக் காரனமான
அவர்களைப்
பார்த்து முதலில்
நன்றி சொல்லிவிட்டு
அழைத்து வரலாம்”.என்கிறாள் பிரியா.
“இப்போதே நான்
பாட்டியைப் பார்க்க வேண்டும்” என்ற கணேஷ் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
தன்னுடைய
மனைவி பிரியாவுடைய
நல்ல மனதையும்,
அவள் உற்சாகமாகப்
புறப்பட்டதையும் கார்த்திக் நினைத்துப் பெருமைப் படுகிறான்.
‘இப்போது
என் கணவனுடைய
அம்மாவை நான்
மரியாதையுடன் நடத்தி, நல்லபடியாகப் பாசமுடன் பார்த்துக்
கொண்டால்தானே, பிற்காலத்தில் என் மகன் கணேஷும், எனக்கு
வரக்கூடிய மருமகளும் என்னை நன்றாகப் பார்த்துக்
கொள்வார்கள்’’ என்று பிரியா தன்
மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள்.
Comments
Post a Comment