எமனுக்கும் உண்டு பயம்
எமனுக்கும் உண்டு பயம் 17.5.2018
விண்ணின் மாயன் எமன் என்ற
ஒருவன்
மண்ணின் மாயம் காண
வந்தான் ஒரு
நாள்
கண்ணின் அழகைப் பெண்ணில்
கொண்ட
தண்ணிலா ஒளி முக அழகியைக்
கண்டான்
கண்டதும் கன்னியிடம் காதல்
கொண்டான்
களவு மணம் உடன்
கொண்டான்.
கற்பு நெறி அங்கு
கண்டான்
கற்பனையில் உலகம் கண்டான்.
கடமைதனை மனதில் கொண்டான்
இன்பம் இனிது கண்டான்
அந்த
இன்பத்தின் கரை கண்டான்
அவள் நெஞ்சம் இவன்
கொண்டான்
இவன் நெஞ்சம் அவள்
கொண்டாள்
.
நதியின் வேகமென நாட்கள் நடந்தன.
நடந்தன பல இன்பங்களும்
துன்பங்களும்
பிறந்தன இல்லை சில
மழலைகள்.
பிறந்தது ஒன்றே ஒன்று,
நன்றே என்று
சொல்லும் ஒரு ஆண்
பிள்ளை.
பேசும் மொழியில் அது
கிள்ளை.
ஆனால் அந்தப் பிள்ளை
எடுப்பார்
கைப்பிள்ளை இல்லை.
அன்பில் வளர்ந்தவன் அறிவில்
உயர்ந்தவன்
பண்பில் இணைந்தவன் கல்வியில்
சிறந்தவன்
இன்பம் என்றும் உண்டு
எமனுக்குத் தீராத்
துன்பமும் என்றும் உண்டு
அவனுக்கு.
அழகியிடம் அழகுக்குப்
பஞ்சமில்லை ஆனால்
அன்பும் பண்பும் உடைத்தாயின்
இல் வாழ்க்கை!
வள்ளுவர் சொன்னது. அந்த அழகியிடம்
அன்பும், பண்பும் கொஞ்சமும் இல்லை
அன்பை அழித்தாள், பண்பை ஒழித்தாள்
அன்புக் கணவனைப் பழித்தாள்
கட்டிய மனைவியால் தீராத
தொல்லை!
இல்லை இப்படியொரு மனையாள்
இவ்வுலகில் என்றென்றும்!.
துறவறம் இவனுக்கு இல்லை, ஏனென்றால்
எமன் இந்த மண்ணின்
மகன் இல்லை!
கூடிவிட்டான் கன்னியிடம் குழந்தை
உண்டு
அதுவும் உண்மை!
கூறாமல் ஓடிவிட்டான் எமனுலகம்
இன்று
அதுவும் உண்மை!.
அன்பு மகனுக்கு ஆசையில்
முத்தமிட்டு,
ஆசிகள் பல வழங்கி, ராசியான
ஒரு வரமும்
தந்திட்டான் எமன்.
மந்திரம் என்பது இல்லாமல்
தந்திரம் சிறிதும் இல்லாமல்
எந்திரம் ஏதும் இல்லாமல்
எந்த நோயும் இல்லாமல்
செய்து விடும் திறமையை
எமன் தன் மகனுக்கு அளித்தான்!.
ஆனால்
நோய் தீர்க்கும்
அந்த நேரம் எமனில்லா
நல்ல நேரம் என்பது ஒரு விதிமுறை!
மகனும் தந்தைக்கு விடை
அளித்தான்.
தந்தையின் நிலைக்குத் தன்
தாயையும்
முன் பழித்தான்.
தந்தையின் நினைவையும் நிலையையும்
பின் அழித்தான்.
இளமை பொங்கும் எழிலரசி
இளவரசி
வளமை குறைந்து நோய்
நிறைந்து காண
மன்னன் மனம் மிக மிக வருந்தி,
பின்
அழகன் திறமை அறிந்து
அன்புடன் அழைத்து
நீள் விழியாள் நோயது
நீங்கப் பெற்றால்
ஒருமையெனப் பிறந்த அருமை
மகளும்,
இந்த மணிமகுடமும் உனக்கே
என்றான்!
அழகன் அழகியைத் தன்
கண்களால் பார்த்தான்
அழகின் வியப்பில் தன் உடல் வியர்த்தான்.
கன்னியின் விழி மொழியைத்
தன்னிரு
விழிகளால் மொழி பெயர்த்தான்.
மனதில் நல்ல முடிவெடுத்தான்
கையில் உடன் செயலெடுத்தான்.
தந்தை எமனோ அங்கு
வரவெடுத்தான்.
அழகன் செய்வதறியாது ஒரு கணம்
திகைத்தான் . மறுகணம் வாய்விட்டு
மிக உரக்கக் கூவினான்
‘அன்னையே, தந்தை
இங்கு’
‘வந்தேன் வந்தேன் நான் அங்கு’ அன்னையின் குரல்.
கேட்டதும் நிற்பானா எமன் அங்கு?
பரபரக்க ஓடினான்
பரலோகம், தன்
பத்தினியைப் பார்க்கப் பயந்து,
மிகப் பயந்து!
அழகனின் கை பட்டது அழகியின்
நோய் விட்டது,
தேன் மொழியாள் அவள் ஒரு மீன்
விழியாள்
அழகனைக் கண்டாள் தன் மான் விழியால்!
அழகன் அழகி இருவர்
கண்கள் ஒன்றை ஒன்று
உண்டன
இருவர் இதயங்களும் இடம் மாறின.
துன்பங்கள் விடை கூறின
இன்பங்கள் உடன் வந்தன.
மன்னன் இருவருக்கும் மணமுடித்து
வைத்தான்
மண மக்களைத் தன் இனிய மனதில்
வைத்தான்
வாழ்த்தொலியைத் தன் உதட்டில்
வைத்தான்.
தேசத்தை மருமகன் கையில் வைத்தான்
தேசாந்திரம் செல்ல முடிவு எடுத்தான்
வாழ்க மணமக்கள்! வாழ்க
பல்லாண்டு
வாழ்க வாழ்க என்று நாமும் வாழ்த்துவோம்!
இந்தக் கதையை இனிய நண்பர் திரு
கந்தசாமி, வக்கீல்,
நிறை நிலா மன்றம், கோயம்புத்தூர்
அவர்கள் 15.5.2018 அன்று
நடைப் பயிற்சியின் போது சொன்னார்கள்.
கதை மனதுக்கு மிகவும் பிடித்திருந்ததால் கவிதை வடிவில் நான் செய்த சிறு முயற்சி.
Comments
Post a Comment