மனைவிக்கு ஒரு வாழ்த்து மடல்
கே.சங்கர கோபாலகிருஷ்ணன்
– 70 எஸ்.செல்லம்மாள் – 65
விழா: பீமரத சாந்தி திருமணம்
நாள்: 30.10.2017 நேரம்:
5.30 – 7.30
இடம்: திருக்கடையூர்
மனைவிக்கு
ஒரு வாழ்த்து மடல்
குறையொன்றுமில்லை என் மனைவி
எனக்கு மனைவியாக
அமைந்ததில்!
இல்லதென் இல்லவள்
மாண்பானால்
குறளுக்கு விளக்கம்
இவளே!
வாழ்க்கைத் துணையென
வந்தவள்
என் வாழ்வின்
துணையாணாள்!
இல்லற வாழ்வில்
ஈரிரண்டு
பிள்ளைகள்!
இணையில்லா கிள்ளைகள்!
நாற்பத்திரண்டு ஆண்டுகள்
நகர்ந்தது தெரியவில்லை!
நீண்டதொரு பயணம் என்னுடனும்,
பிள்ளைகள், மற்றும் என்
பெற்றோருடனும்!
பராசக்தி வசனம் போல என் மனைவி
தென்றலைத் தீண்டியதில்லை!
துன்பங்களைத் தாண்டியிருக்கிறாள்.
வாழ்வில் துன்பங்களே
இன்பங்களை
மிஞ்சினாலும் சோர்ந்ததில்லை
என் மனைவி ஒரு நாளும்1
செல்விருந்து சென்று
வருவிருந்து வந்த போதும்.
இல்லறத்தின் கடமைகளை
இனிதே ஆற்றியவள்
என் மனைவி.
எங்கள் வாழ்வில், குடும்பத்தில்
அன்பு நிறையென்றதால்
குறையொன்றுமில்லை!
ஆன்ற அறிவு என்பதால்
குறையொன்றுமில்லை.
இனிமை நிறைந்திருந்ததால்
குறையொன்றுமில்லை.
ஈகை குணமென்றதால்
குறையொன்றுமில்லை.
உயர்ந்த உள்ளம் என்பதால்
குறையொன்றுமில்லை.
ஊக்கம் கொடுத்ததால்
குறையொன்றுமில்லை.
எண்ணங்கள் தெளிவென்பதால்
குறையொன்றுமில்லை.
ஏற்றம் இருந்ததால்
குறையொன்றுமில்லை.
ஐயம் இல்லை என்பதால் குறையொன்றுமில்லை.
ஒழுக்கம் உணர்த்தியதால்
குறையொன்றுமில்லை.
ஓதுமொழி சொன்னதால்
குறையொன்றுமில்லை.
ஔடதம் தந்ததால் குறையொன்றுமில்லை.
அஃஎன்ற ஆயுதம் இல்லாததால்
குறையொன்று என்றுமே இல்லை!.
really super
ReplyDeleteநன்றி, தங்களுடைய பாராட்டுதலுக்கு!
ReplyDeleteஅழகியும் அற்புத மனிதனும் கவிதை, மன்னிப்பு கதை --
தங்கள் விமர்சனம் எதிர்பார்க்கிறேன்
கவிஞர் கே,எஸ்.கோபாலகிருஷ்ணன்.