ஏன் வேண்டும் சுத்தம்?
                ஏன் வேண்டும்
சுத்தம்?
ஆற்று  நீரை  மீன்கள்
 செய்வது
 சுத்தம்
ஊற்று  நீரை  மணல்  செய்வது
 சுத்தம்
அருவி  நீரை  மூலிகை  செய்வது
 சுத்தம்
மழை  நீரை  மண்மகள்
 செய்வது
 சுத்தம்!
வீட்டில்  மனைவி
தினம்  ஒருமுறை
 செய்யலாம்
 சுத்தம்!
வீட்டில்  கணவன்
வாரம்  ஒருமுறை
 செய்யயலாம்
 சுத்தம்!
வீட்டில்  குழந்தைகள்
என்றும்  செய்யலாம்
 சுத்தம்!
எங்கும்  செய்யலாம்
 சுத்தம்
!
எப்போதும்  செய்யலாம்
 சுத்தம்!
சுத்தம்  இருந்தால்
அன்பு  நிறைந்திருக்கும்
 வீட்டில்,
நாட்டில்
ஆற்றல்  பெருகிவரும்
 வீட்டில்,
நாட்டில்
இன்பம்  இணைந்திருக்கும்
 வீட்டில்,
நாட்டில்
ஈடில்லாப்  புகழ்  வரும்  வீட்டில்,
நாட்டில்
உயர்வு  தோன்றி  விடும்  வீட்டில்,
நாட்டில் 
ஊக்கம்  வளர்ந்து
 வரும்
 வீட்டில்,
நாட்டில்
என்றும்  வளமிருக்கும்  வீட்டில்,
நாட்டில்
ஏற்றம்  மிகுந்திருக்கும்
 வீட்டில்,
நாட்டில் 
ஐயம்  தெளிவு  பெறும்  வீட்டில்,
நாட்டில் 
ஒழுக்கம்  உயர்வு  தரும்  வீட்டில்,
நாட்டில்
ஓங்காரம்  என்றுமிருக்கும்
 வீட்டில்,
நாட்டில்
ஔடதம்  ஏன் வேண்டும்  வீட்டில்,
நாட்டில்
அஃக்  என்பது  இருக்காது
 வீட்டில்,
நாட்டில்
சுத்தப்படுத்திய பின்பு
இருவேறு நிலைகள் உண்டு
பகுத்தறிவால் பகிர்தல் கண்டு
மக்கும் என்பது ஒரு
வகையாம்
மக்காது என்பது சில
வகையாம்
மற்றது  என்பது பல வகையாம்
பிரித்தெடுத்தால் பலன் உண்டு
இல்லையென்றால் நோய் உண்டு
இதில்
நாடு என்ன செய்யும்?
நாம் என்ன செய்வோம்?
இரு வேறு மன
நிலை 
ஒருபோதும் தேவையில்லை
ஒரு நிலை மனம்
கொண்டு,
நாம்
எல்லோரும் நினைக்கலாம்
எப்போதும் நிகழ்த்தலாம்
நாடும் வீடும் என்ற
இரு கைகள் இணைந்தால்
நல்லன நடந்தே தீரும்
அல்லன அழிந்தே தீரும்!
வணக்கம்!             வாழ்த்துக்கள்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
98941 87627
Please visit : www.myiniyatamil.blogspot.in
25.12.2017 அன்று மாலை கே.கே.புதூர்
யோகா மையத்தில் மாநகராட்சி (திடக் கழிவு மேலாண்மை பொருள் )அதிகாரிகள், பொது மக்கள்
கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வாசித்த கவிதை ‘ ஏன் வேண்டும் சுத்தம்’
 
Comments
Post a Comment