தமிழர் பண்பாடு -- வேட்டியின் பயன்பாடு
தமிழர்  பண்பாடு  --  வேட்டியின் பயன்பாடு
அழகிய  விழிகள்
 கொண்ட
                                   
பெண்கள்  சேலை கட்டுவது ஒரு
 அழகு
ஆளுமை, விழிகள்  கொண்ட 
ஆண்கள்  வேட்டி  கட்டுவது
ஒரு அழகு
வேட்டி கட்டுவது எப்போதும்
ஒரு கலை,
அது
சேயிழைப் பெண்கள் சேலை
கட்டுவது போல!
வெட்டி  எடுப்பதால்
 வேட்டி
 என்றும்
துண்டு  போடுவதால்
 துண்டு
 என்றும்
எல்லோரும்  சொல்வதுண்டு.
கட்டிக் கரும்புடன், மண்ணில்
வெட்டி எடுத்த கிழங்குடன்
அடுப்புக்
கட்டி மேல் குயவர்கள்
மண்ணை
சுட்டு எடுத்த புதுப்
பானைகளில்,
பொங்கலிடும் விழாக்களில்    
தமிழர்  கட்டுவது
புத்தம் புது
வேட்டிதானே
எந்த  ஊரில்  இருந்தாலும்,
எந்த நாட்டில்
இருந்தாலும
வீட்டில் விழா என்றால்
தமிழர்  கட்டுவது
 புத்தம்
புது வேட்டிதானே.
எந்த  வேலை பார்த்தாலும், எந்தத்
 தொழில்
செய்தாலும்
வீட்டில் விழா என்றால்
தமிழர்  கட்டுவது
 புத்தம்
புது வேட்டிதானே
காதல் திருமணமோ, கடிது
திருமணமோ,
பெற்றோர் நடத்தும் திருமணமோ
அன்று  
மணமகன் விரும்பி அணிவது
புத்தம் புதுப்  பட்டு  வேட்டிதானே.
கிராமங்களில்  திருவிழா,
கோயில்களில் திருவிழா 
எங்கெங்கு திருவிழா நடந்தாலும்
அங்கங்கு  தமிழர்  விரும்பி
அணிவது  
புத்தம்  புது  வேட்டி தானே
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்
கன்னியர்
கடைக் கண் காட்டிவிட்டால்
துள்ளி  வரும்  காளைகளை
துடிப்புடன்  அடக்க 
கன்னியரை  மயக்க,
அவர் மனதில்
இடம் பிடிக்க
 பிறகு  அவரை  மணக்க காளையர்கள்
 என்றும்
விரும்பி  அணிவது  புத்தம்
புது  வேட்டிதானே
அரசியலில் அன்றும் இன்றும்
தலைவர்கள் 
என்றும் விரும்புவது  வெண்ணிற
வேட்டிதானே
வேட்டியில் பல வகைகள்
 என்று
சொல்வதுண்டு 
நான்கு முழம், எட்டு
முழம், பஞ்ச
கச்சம், 
கதர் வேட்டி,, , கைத்தறி
வேட்டி பட்டு
வேட்டி 
பாலியெஸ்டர் வேட்டி என்று
சொல்வதுண்டு...
அண்ணல்  காந்தி  மதுரை  வந்தார்
மாநகர  மக்கள் வரவேற்பு  தந்தார்
ஏழைகள் கண்டார், அவர்
 உடுத்தும்
ஆடைகள்  கண்டார்,
மனம்  நொந்தார்.
ஏழைகள் அணிந்த  அரை ஆடையை
தன் அரையில் அணிந்தார்.
அன்றுமுதல்
மகாத்துமா என்ற பெயரும்
அணிந்தார்.. 
கதராடை அன்று அண்ணல்  காந்தி
விற்றார்
கைத்தறியாடை   அறிஞர்
 அண்ணா
 விற்றார்.
ஏழைகளாம் , நெசவாளர்  தம்  உழைப்பில்
 கண்ட
கதர்,, மற்றும் கைத்தறி
வேட்டிகளை  நாம்
என்றும் , எல்லோரும் 
விரும்பி அணியலாமே
ஆண்டில் ஒரு முறை
வரும்,  வேட்டி  தினத்தன்றும்,
வாரம்  ஒரு முறை, ஏதோ
 ஒரு
 தினத்தன்றும்
வேட்டிதான்  கட்டுவோம்
 என்று,
எல்லோரும்  எடுப்போம்
 இன்று
ஒரு சபதம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், உறுப்பினர், நிறை நிலா மன்றம், கோவை – 641 038  மொபைல்: 98941 87627.
 
Comments
Post a Comment