விண்ணின்று பெய்யும் மழை


விண்ணின்று பெய்யும் மழை                      1.9.2017

இரண்டு நிமிடங்களில்
இன் கவிதை
இனிய தமிழ் மொழியில்
என் கவிதை

குடையொன்றும் தேவையில்லை
மழையில் நனையுங்கள்
என் கவிதை
மழையில் நனையுங்கள்

மழை இன்று பெய்யட்டும்   மனித  ,
மனம் நன்று மலரட்டும்!
மழை இங்கு பொழியட்டும்! நமது
மனம் நன்கு குளிரட்டும்!

மலர்கள்  மணம் வீசி மலரட்டும்,
மழலைகள்  இதழ் திறந்து சிரிக்கட்டும்!.
பயிர்கள்  எல்லாம் தழைக்கட்டும்,
உயிர்கள்  எல்லாம் பிழைக்கட்டும்!.

மழை நன்று பெய்யட்டும்

ஆறுகள்  அகன்று பெருகட்டும்,
குளங்கள்  நிரம்பி வழியட்டும்!.
அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டட்டும்,
ஆனந்தம்  இருகைகள்  தட்டட்டும்!.

மழை நன்கு பொழியட்டும்

நிலமகள்  இன்று நனையட்டும்!
நினைவுகள்  நெஞ்சில் படரட்டும்!.
உலகம்  மிகவும் செழிக்கட்டும்,
உன்னதம்  உடன்  உயரட்டும்!.

மழை இங்கு பெய்யட்டும்

மின்னல் பளிச்சென்று மின்னட்டும்
இடி தடதடவென ஒலிக்கட்டும் 
வானம்   இடியுடன் திறக்கட்டும்,
புது வையமின்று  பிறக்கட்டும்!.
மலைகளில் மழை பொழியட்டும்
ஓடைகளில் வெள்ளம் ஓடட்டும்
அணைகளில் நீர் நிரம்பட்டும்
அனைவரின் உள்ளம் மகிழட்டும்.

மழை இன்று பொழியட்டும்
இந்த மானில தூசகலட்டும்!
மழை நன்று பெய்யட்டும்,
மனித மனதின் தூசகலட்டும்!.
ஏழ்மை இங்கு அகலட்டும்
ஏழை இனிதே சிரிக்கட்டும்
பசிப்பிணி இன்றே ஒழியட்டும்
பாரதம் பண்புடன் ஒளிரட்டும்

மழை இங்கு பொழியட்டும்

லஞ்சம் நம் நாட்டில் மறையட்டும்
வஞ்சம் அவர் நெஞ்சில் விலகட்டும்
பஞ்சம்  நாடுவிட்டு பறக்கட்டும்
பாரதம் இவ்வுலகில் சிறக்கட்டும்.

மழை இனிது பெய்யட்டும்

நல்லன  இன்றே தோன்றட்டும், உலகில்
அல்லன  அன்றே  அழியட்டும்!
நல்லது  உடனே நடக்கட்டும்,  இந்த
நானிலம்  நன்றே  வாழட்டும்!.  

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE