கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்
கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! --- 1 ( கடவுள் வாழ்த்து) அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைதாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அஞ்சிலே ஒன்று வைத்தான் ; அவன் எம்மை அளித்துக் காப்பான் . ( ஆஞ்சனேயர் பற்றி கம்பனின் அற்புத பாடல்) சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் , கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் , வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில் தாங்காது , அப்புறம் சுழன்று , கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என , போயிற்று அன்றே ! ...
Comments
Post a Comment