தொழிலாளர் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும்
நண்பர்
திரு அ.குமர குருபரன் அவர்களைப் பாராட்டி
வழங்கிய வாழ்த்து மடல்
அல்லி மலர் அழகெல்லாம் ஆதவனுக்குச்
சொந்தம்
மல்லிகையின் மலரெல்லாம் மாந்தருக்குச்
சொந்தம்.
அகநகும் நட்பெல்லாம் குமரனுக்கே
சொந்தம்,
நாட்டைக் காத்திடவும், நற்பணி
ஆற்றிடவும்
வீட்டைத் துறந்து விட்டு வீர நடை
போட்டவன்.
பெற்றவர் கடமை தன்னைப் பேணிக்
காத்திடவும்
உற்ற தமிழ் நண்பர்களின் உறவுகள்
பூத்திடவும்
ஓடி வந்தான் குமரனவன், உயர்ந்த
தமிழ்ச் செல்வனவன்.
எந்த நாட்கள் நாம் சந்திக்கவில்லை?
எதைப்பற்றி நாம் சிந்திக்கவில்லை?
சந்திப் பிள்ளையார் கோயில் முன்பு
சந்தித்தோம் பலமுறை, சிந்தித்தோம்
வரையிலை.
அறிவுக்கு அரசியலும், ஆன்மாவுக்கு
ஆன்மீகமும்.
இனிமைக்குக் காதலும், காதலுக்குக்
கவிதைகளும்.
சிந்தனைக்கு இலக்கியமும், சிறந்த
ஒரு தத்துவமும்.
பண்புக்கு ஒழுக்கமும் பகிர்ந்தோம்
நமக்குள்ளே.
உணர்வுகள் வேறுபட்டாலும் உள்ளங்கள்
வேறுபட்டதில்லை.
சுற்றி வந்த இடங்கள் சொல்லும்,
அறிவு
கற்று வந்த இடங்கள் சொல்லும்,
நாம்
பெற்று வந்த பெருமைகளை, பிறர்
போற்றி வந்த அருமைகளை!
அன்புக்கு ஒரு குமரன், நல்ல அறிவுக்கு
ஒரு குமரன்.
தமிழ்ப் பண்புக்கு ஒரு குமரன்,
பாசத்துக்கு ஒரு குமரன்.
என்றெல்லாம் வாழ்த்தும் நண்பர்கள்
யாரிவர்?
வீரம் கொண்ட உள்ளம், வீரபத்திரன்
ஒரு நண்பன்.
கனிவு கொண்ட கண்கள், களஞ்சிராஜன்
ஒரு நண்பன்.
இனிமை கொண்ட இளைஞன், இளங்கோ ஒரு
நண்பன்.
சிந்தனை சிற்பியவன், சிவராமன்
ஒரு நண்பன்,
சந்தங்கள் கவி எழுதும் சங்கரும்
ஒரு நண்பன்.
ஓய்வு என்பது உடலளவில், இல்லை
உமது மனதளவில்.
வானம் உண்டு, வையகமும் உண்டு
கானம் உண்டு, கானகமும் உண்டு.
மலர்கள் உண்டு, மானினமும் உண்டு.
எனவே
கையில் பேனாவையும், கருத்தில்
கவிதையையும் கொண்டு
சுந்தரத் தமிழினில் பல விந்தைகள்
புரிந்திடவும், நாடி வரும்
நலங்கள் எல்லாம் பெற்றிடவும்,
நல்ல
வளங்கள் எல்லாம் சேர்ந்திடவும்
நினைவெல்லாம் தமிழும் நட்பும்
மணக்க
நாங்கள் உன்னை வாழ்த்துகிறோம்,
வாழ்த்துகிறோம்,
வாழ்த்திக் கொண்டே இருக்கின்றோம்.
நண்பர்கள் : தி.
வீரபத்திரன், இ. களஞ்சிராஜன் சே. சிவராமன்
ப. இளங்கோ, கோ. சங்கர்
Comments
Post a Comment