திவ்ய தேச தரிசனம்
ஆழ்வார்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் இந்தியா முழுவதும் அமைந்திருக்கின்றன.
அந்த திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. செப்டம்பர் 13 - 16 தேதிகளில் ஒரு திவ்ய தேச தரிசனம்
செய்யத் திட்டம் தயாரானது. உடனடியாக தூத்துக்குடியில் இருக்கும் வடிவு, வடிவு மாப்பிள்ளை
இருவருக்கும் திட்டம் தெரியப்படுத்தப் பட்டது. அவர்களும் உடனே சம்மதம் சொன்னார்கள்.
நாங்கள் இருவரும் கோயம்புத்தூரிலிருந்து 13 ந் தேதி காலை 7 மணி ரயிலில் புறப்பட்டு
2 மணிக்கு கும்பகோணம் சென்றோம். அவர்கள் இருவரும் காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு
4 மணிக்கு கும்பகோணம் வந்தார்கள். மகாமகத் தெப்பக்குளத்திற்க்கு அருகில் உள்ள ஹோட்டல்
ராயாஸில் தங்கினோம்.
108
திவ்ய தேசங்களுள் அதிகமான பெருமாள் கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டன.அதிலும்
திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்கள் அமைந்த காரணம். - திருமங்கை ஆழ்வார் முதலில்
மன்னராக இருந்தவர். ஒருநாள் திருநாங்கூரில் உள்ள குளத்தில் குமுதவல்லி நாச்சியார் குளித்துவிட்டு
வரும் போது, பார்த்தவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குமுதவல்லி நாச்சியார்
' திருமங்கை மன்னர் வைஷ்ணவராக மாற வேண்டும். 1008 நபர்களுக்கு அன்ன தானம் செய்ய வேண்டும்'
என்றார். மன்னர் இந்த இரண்டு வேண்டுதல்களையும் நிறைவேற்றியதும் இருவருக்கும் திருமணம்
நடந்தது.
மனைவி
பிறந்த இடம், திருமணம் நடந்த இடம் என்பதால், திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களைக்
கட்டினார் என்பது வரலாறு.
(
1008 நபர்களுக்கு உணவு படைத்த இடம் - ஊரின் ஒரு பகுதி -இலை அமுது கூடம் என்பது இப்போது இளைய மதுக் கூடம் என்றாகி விட்டது.)
13-09-2012 - வியாழன் கிழமை - கும்பகோணம்
மாலை
5 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணத்தில் 5 கோயில்கள் பார்த்தோம்.
1.
காசி விஸ்வநாதர் திருக்கோயில் : மகாமகம் தெப்பக்குளத்திற்க்கு அருகில் இருக்கிறது.
மிகவும் பழமையான கோயில்.
2.
திரு நாகேஸ்வரர் கோயில் : நாக தோஷ நிவர்த்திக்காக
இங்கு வருவார்கள். சித்திரை மாதம் 11,12, 13 மூன்று நாட்களில் சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அமைப்பில்
கோபுர வாசல் கட்டப்பட்டிருக்கிறது.
3,
சாரங்கபாணி திருக் கோயில். : பெருமாள் சயனம்.
ஆராவமுதன் -கோமள வல்லித் தாயார். மிகவும் பிரம்மாண்டமான கோயில்.
4,
ஆதி கும்பேஸ்வரர் கோயில். : பெருமாள் - ஆதி கும்பேஸ்வரர் - மங்களாம்பிகைத் தாயார்
5.
ராமர் கோயில் : ராமர், சீதை, லக்ஷ்மனன், அனுமார் . நுழைவு வாயில் சிற்பங்கள் மிகவும் அற்புதம்.
நடந்து
சில கோயில்கள், ஆட்டோவில் சில கோயில்கள் பார்த்தோம்.
14.9.2012 - வெள்ளிக் கிழமை - கும்பகோணம்
1.
ஒப்பிலியப்பன் கோயில் : பெருமாள் - நின்ற திருக்கோலம் ஒப்பிலியப்பன்
- பூமி தேவி நாச்சியார். பிரம்மாண்டமான கோயில்.
((மாமி மெஸ் - சுவையான டிபன்.)
2.
நாச்சியார் கோயில் - திருநறையூர்: ஸ்ரீனிவாசன் - வஞ்சுளவல்லித் தாயார். இந்தக் கோயிலில்
உள்ள கல் கருடன் மிகவும் அற்புதமானது. 5
- 7 அடி உயரமுள்ள கல் கருடன் ஆண்டுக்கு இருமுறை ஊர்வலம். முதலில் 4 பேர், பிறகு 8 பேர்,
16 பேர், 32 பேர், 64 பேர் தூக்கி வருவதாகக்
கூறுகிறார்கள். வெளியே வரும் போது கூடுகிற எடை, திரும்பி வரும் போது குறைந்து கொண்டே வரும் என்று சொல்கிறார்கள்(64,32,16,8,4)
மார்கழி ஏகாதசிக்கு 4 நாட்கள் முன்பும், பங்குனி உத்திரத்திற்கு 5 நாட்கள் முன்பும் கல் கருடன் வீதி உலா வருகிறார்.
3.
திருச்சேறை : பெருமாள்,
நின்ற திருக்கோலம்(திருப்பதி வெங்கடாஜலபதி தோற்றம்) - சாரநாதன் - சாரநாயகி
4.
நந்திபுர விண்ணகரம் : பெருமாள்,
வீற்றிருந்த கோலம் ஜகந்நாதப் பெருமாள் - செண்பகவல்லி
5.
பட்டீஸ்வரம் : சிவன் கோயில்
- தேனுபுரீஸ்வரர் - துர்க்கை அம்மன். துர்க்கை அம்மன் மிகவும் சக்தி உள்ளது என்கிறார்கள்.
6.
திருப்புள்ளம் பூதங்குடி : பெருமாள்
சயனக் கோலம் வல்வில் ராமன் - - பொற்றாமரையாள்.
7.
திரு ஆதனூர் :பெருமாள் சயனக் கோலம். ஆண்டளக்கும் ஐயன் - கமலாசினித் தாயார்.
8.
சுவாமி மலை : முருகன் - வள்ளி,
தெய்வானை அறுபடை வீடுகளில் ஒன்று. 60 படிகள்,
குன்றில் அமைந்துள்ளது.
(கோயில்
அருகில் மாமி மெஸ். சுவையான டிபன்.)
மதிய
உணவு ; வெங்கடரமனா ஒட்டல் மிகவும் சுவையாக இருந்தது.
மதியம்
2 மணிக்கு கும்பகோணத்திலிருந்து நேராக திருநாங்கூர் சீர்காழியிலிருந்து 10 கி.மீ.)
சென்றோம். அங்கு 11 பெருமாள் கோயில்கள் உள்ளன.
1.
திருமணிமாடக் கோயில், 2. வைகுந்த விண்ணகரம், 3. அரிமேய விண்ணகரம். 4. திருத் தேவனார்
தொகை. 5. திருவெண்புருஷோத்தமம். 6. செம்பொன்செய் கோயில். 7. திருத்தெற்றி அம்பலம்.
8. திருமணிக் கூடம். 9. திருக்காவளம்பாடி. 10. திருவெள்ளக்குளம். 11. திருப்பார்த்தன்பள்ளி.
13
ந் தேதி 4 பெருமாள் கோயில்கள் தான் பார்க்க முடிந்தது. 6.30 மணி - 7.30 மணி வரை பலத்த
மழை. மயிலாடுதுறை வந்து, தயாளன் ஒட்டலில் தங்கினோம்.
மறு
நாள் காலை 6.30 க்கு புறப்பட்டோம். இரவு ஒட்டல் அபிராமியில் சுவையான டிபன்.
15.9.2012 -- சனிக் கிழமை - மயிலாடுதுறை
திருநாங்கூர்
கிராமத்தைச் சுற்றி 6-7 கி.மீ. அளவில் இந்த 11 பெருமாள் கோயில்களும் அமைந்துள்ளன. முதலில்
வரும் கோயில் அண்ணன் பெருமாள் - திருவெள்ளக்குளம். அங்கிருந்து ஒரு கைடு (வழிகாட்டும்
நபர்) உடன் தான் மற்ற 10 கோயில்களையும் பார்க்க முடியும். யாராவது வந்தால்தான் சில கோயில்களை திறப்பார்கள்.
பூஜை செய்பவருடைய மொபைல் போன் நம்பர் கைடுக்குத்தான் தெரியும். கைடுக்கு ரூபாய்
200/ மட்டும்தான்.
1.திருமணிமாடக்
கோயில் -
பெருமாள் வீற்றிருந்த கோலம். நாராயணன்
- புண்டரீகவல்லி - தை அமாவாசைக்கு மறு
நாள் 11 பெருமாள்களின் கருட சேவை இத்தலத்தில்தான் நடைபெறுகிறது.
2.
வைகுந்த விண்ணகரம் பெருமாள் வீற்றிருந்த
கோலம். வைகுந்த நாதன் - வைகுந்தவல்லி
3.
அரிமேய விண்ணகரம் -பெருமாள் வீற்றிருந்த
கோலம். குடமாடு கூத்தர் - அம்ருதகடவல்லி
4
.திருத் தேவனார் தொகை பெருமாள் வீற்றிருந்த
கோலம். மாதவன் - கடல்மகள் நாச்சியார்.
5
திருவெண்புருஷோத்தமம் பெருமாள் நின்ற திருக்கோலம்
புருஷோத்தமர் - புருஷோத்தம நாயகி
6.
செம்பொன்செய் கோயில்- பெருமாள் நின்ற திருக்கோலம்
பேரருளாளன் - அல்லிமலர் நாச்சியார்
7.
திருத்தெற்றி அம்பலம் - பெருமாள் பள்ளி கொண்ட ரங்கநாதர் - செங்கமலவல்லி
8
திருமணிக்கூடம் - பெருமாள் நின்ற திருக்கோலம் வரதராஜப் பெருமாள் - திருமகள் நாச்சியார்
9.
திருக்காவளம்பாடி - பெருமாள் நின்ற திருக்கோலம் ராஜகோபாலசாமி
- செங்கமல நாச்சியார்
10.திருவெள்ளக்குளம் பெருமாள் நின்ற திருக்கோலம் ஸ்ரீனிவாசன்
- பத்மாவதி
11.திருப்பார்த்தன்பள்ளி. - பெருமாள்
நின்ற திருக்கோலம் பார்த்தசாரதி - கோலவில்லி
ராமர்
திருநாங்கூரில்
பார்த்த வேறு சில கோயில்கள்:
1.
திருவாலி - லக்ஷ்மி நரசிம்மர் 2. திருநகரி -- கல்யாண ரங்கனாதர் 3. வீர நரசிம்மர்
4.
தலைச்செங்காடு - நான்மதியப் பெருமாள்.
2.30
மணிக்கு ஒட்டல் அபிராமியில் நல்ல சாப்பாடு. 3.15 - 4.15 வரை ஒய்வு. தங்கியிருந்த அறையைக்
காலி செய்து விட்டு, 4,30 க்கு மயிலாடுதுறை(மாயவரம்)யில் உள்ள திருஇந்தலூர் கோயில்
சென்றோம்.
1.திருஇந்தலூர்: பெருமாள் சயனம். சுகந்தவன நாதன் - புண்டரீகவல்லி
பெரிய கோயில்.
2.தேரழுந்தூர்
: பெருமாள் நின்ற திருக்கோலம் ஆமருவியப்பன் - செங்கமலவல்லி பெரிய கோயில்.கம்பர்
பிறந்த இடம்.
"யாம்
வந்த காரியம் ஆராய்ந்து அருள்." - கடவுளிடம்
நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கத் தேவையில்லை. - கோயில் பட்டர் சொன்னது.
7.00
மணி - 7.30 மணி, பெருமழை பெய்தது. நேராக கும்பகோணம் வந்து, இரவு 9 மணிக்கு வெங்கடரமணாவில்
டிபன்.
வெங்கட
ரமணாவில் நல்ல ரூம் கிடைத்தது. வடிவும், வடிவு மாப்பிள்ளையும் 10 மணி பஸ்ஸில் தூத்துக்குடி
சென்றார்கள்.
16.9.2012
- ஞாயிற்றுக் கிழமை - கும்பகோணம்
காலை
கவிதாலயாவில் டிபன், (வெங்கடரமணா விடுமுறை) 10. மணிக்கு சக்ரபாணி கோயில். மிகவும் பழைய
கோயில்.
பெருமாள்
சக்ரத்தில் நின்ற கோலம்.
11
மணிக்கு நாங்கள் இருவரும் ஆட்டோவில் 15 கி.மீ, தூரமுள்ள விட்டல் - ருக்குமணி , வட இந்தியா
அமைப்பில் பிரமாண்டமான கோயில் சென்று பார்த்தோம். விட்டல், ருக்குமணி பாதங்களைத் தொட்டு
எல்லோரும் வணங்கலாம். திரும்பி வரும் வழியில், திருபுவனம்(பட்டுக்கு பெயர் உள்ளது)
என்ற ஊரில் உள்ள சரபேஸ்வரர் கோயில் சென்றோம். அற்புதமான கோயில். பூஜை செய்யும் ஐயர்
சொன்ன கதை ' நரசிம்ம அவதாரம், இரண்யன் வதம் முடிந்தும், சினம் குறையாத நரசிம்ம மூர்த்தியை,
சிவன் யாளி உடலுடன், சரபர் பறவையாகப் பறந்து வந்து இரண்டு இறக்கைகளாலும் (ஒரு இறக்கை
மகா காளி, மறு இறக்கை
ப்ரத்தியங்கரா
தேவி) சேர்த்து அணைத்து, பறந்து செல்ல, பெருமாள் சினம் தணிந்து வைகுண்டம் சென்றார்'
கோயிலில் விக்ரம் அதே அமைப்பில் உள்ளது.
2.00
மணி -கோயில் பிரசாதங்கள் - மதிய உணவு.
3.15 மணி ரயில். 9.45 மணி கோயம்புத்தூர். லக்ஷ்மிநாராயணன் காரில் வீடு சென்றோம்.
சங்கர
கோபால கிருஷ்ணன் - செல்லம்மாள்
முருகன் - வடிவு
Comments
Post a Comment