தீபாவளித் திருநாள்!
தீபாவளித் திருநாள்
தீபங்கள் ஒளி சிந்தும்
ஒரு தீபாவளித் திருநாள்!
தீமைகள் அகன்றிட
ஒரு தீபாவளித் திருநாள்!
இன்பங்கள் பெருகிட
ஒரு தீபாவளித் திருநாள்!
துன்பங்கள் விலகிட
ஒரு தீபாவளித் திருநாள்!
செல்வங்கள் வந்திட
ஒரு தீபாவளித் திருநாள்!
சிறப்புடன் வாழ்ந்திட
ஒரு தீபாவளித் திருநாள்!
மங்கையர் மனம்
மகிழ ஒரு தீபாவளித் திருநாள்!
மங்களம் பொங்கிட
ஒரு தீபாவளித் திருநாள்!
புத்தாடைகள் புனைந்திட
ஒரு தீபாவளித் திருநாள்!
புத்துணர்வு பெற்றிட
ஒரு தீபாவளித் திருநாள்!
புன்னகை புரிந்திட
ஒரு தீபாவளித் திருநாள்!
பொன் மனம் பெற்றிட
ஒரு தீபாவளித் திருநாள்!
வாழ்க இந்த மானுடம்!
வாழ்க இந்த வையகம்!
Comments
Post a Comment