திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆமாம் ! திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவுக்கு மட்டும் ஏன் இந்த சுவை? காரணங்கள் என்னவென்று பார்ப்போமா? இராஜஸ்தானிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங் என்ற சிங்க இனத்தவர்கள் திருநெல்வேலி வந்தார்கள். அவர்கள் தயாரித்த இனிப்புகளில் அல்வாவின் சுவை சுற்று வட்டாரங்களில் வசித்த வந்த மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல் அல்வா தயார் செய்ய மாட்டார்கள். எனவேதான், மாலை 5 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 8 – 9 மணிக்குக் கடையை அடைத்து விடுவார்கள். பல ஆண்டுகளாக, எனக்குத் தெரிந்து சுமார் 50 ஆண்டுகளாக, இந்த நடைமுறை இருந்து வருகிறது. தரமுள்ள பஞ்சாப் கோதுமையை ஊற வைத்து, கைகளால் உரலில் இட்டு அரைத்துப் பால் எடுக்கிறார்கள். ( மற்ற கடைகளில் இயந்திரங்களில் அரைத்துப் பால் எடுப்பது வழக்கம் ). அல்வா தயாரிக்கும் முறை, பக்குவம் சிங் குடும்பத்தின் இரகசியம். ஒரு நாள் தயாரித்த அல்வா மறு நாள்தான் விற்பனைக்கு வரும். தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் ஒரு முக்கிய காரணம் என்று திரு ஹரிசிங் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஏன் ? தாமிர...