ஓநாய்களின் கூட்டம்
15.3.2019 ஓநாய்களின் கூட்டம் பல நாட்கள் தவமிருந்து பத்து மாதங்கள் சுமந்து அவளைப் பெற்றோமடா மார்பிலும், எங்கள் தோளிலும் சுமந்தும், திரிந்தும் அவளை வளர்த்தோமடா பாலூட்டி அவளை வளர்த்தோமடா, நல்ல பண்பூட்டி அவளை வளர்த்தோமடா. - அவள் பள்ளி செல்லும் அழகைப் பார்த்தோமடா துள்ளும் மானாக, மயிலாக அவளைக் கண்டோமடா மடியில் தவழ்ந்து, மார்பில் வளர்ந்த மழலை அவளடா -- எங்கள் வீட்டின் மகாலட்சுமி அவளடா...