திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை
திருநெல்வேலி அல்வா – இனிய கவிதை தென்றல் தவழ்ந்து வரும் , எழில் மேகம் தழுவ வரும் தேன் மதுரத் தமிழோசை, குயில் ஓசை பரவி வரும் தென் பொதிகை மலை, எங்கள் மலை ! குறு முனிவன் தவம் செய்த பொதிகை மலை நறு மலர்கள் மணம் பரப்பும் பொதிகை மலை சிறு நதிகள் ஓடி வரும், பெரு நதியாய் கூடி வரும் பெறு வளங்கள் நாடி வரும் , பெருமையெல்லாம் தேடி வரும் தென் பொதிகை மலை எங்கள் மலை! மலையினில் கருவாகி , அருவியென உருவாகி நதியென இரு கரைகள் தழுவி ஓடி , வழி எல்லாம் ஊற்று மிகுந்து வரும், வற்றாமல் வளம் பார்க்கும், நலம் சேர்க்கும் தாமிரபரணி நதி இருப்பது எங்கள் திருநெல்வேலி !. காலையில் கண் விழித்தேன் , கடமையெல்லாம் முடித்தேன் . நடைப் பயிற்சி நான் வந்தேன் நலம் வ...