காயத்ரி -- சிறு கதை
காயத்ரி “ ரஞ்சிதம், பசிக்கிறது. சீக்கிரம் இலையைப் போடு, கை, கால் கழுவி விட்டு வருகிறேன். “ என்று சொல்லிக் கொண்டே ராம கிருஷ்ணன் வீட்டின் பின் பக்கம் சென்றார். ரஞ்சிதம் முகத்தில் ஒரு புன்னகை. தன் கணவர் ‘ஸ்ரீ கிருஷ்ணா’ ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாலும், அங்கு சாப்பிட விரும்பாமல் தினம் மூன்று வேளைகளும் வீட்டிற்குத்தான் இத்தனை ஆண்டுகளும் சாப்பிட வந்து விடுகிறார். ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்து வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், ராம கிருஷ்ணனுக்குத் தன் மனைவி ரஞ்சிதம் சமைத்த உணவுதான் விருப்பமாக இருந்தது. அதிலும் மனைவி பரிமாறி சாப்பிடுவது மனதுக்கும், வயிற்றுக்கும் ஒரு திருப்தியாக இருக்கிறது என்று எல்லோரிடமும் சொல்லுவார்.. அனேகமாக, கூட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ஹோட்டலில்தான் மூன்று வேளைகளும் சாப்பிடுகிறார்கள். ...