முதியோர் இல்லம் - சிறுகதை
                 முதியோர் இல்லம் -சிறுகதை                                                                                                              கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்                                                         என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது ‘நானா நானி ’  (நானா என்றால் தாத்தா, நானி என்றால் பாட்டி)   என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து வரும் நண்பர் வள்ளிநாயகம் “ ராஜசேகர்,   நீயும்தான் ஒய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய். ஒரு நாள் உன் மனைவியுடன் நான் வேலை பார்க்கும் ‘நானா நான...