வாழைக்காய் பஜ்ஜியும் வாய் மணக்கும் சொஜ்ஜியும்
                 வாழைக்காய்   பஜ்ஜியும் வாய் மணக்கும் சொஜ்ஜியும்                                     --   கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்     என்  பெயர்  ராம்  குமார் . நான் பிறந்த ஊர் தென்றல் தவழ்ந்து வரும், தேன் மதுரத் தமிழோசை கேட்கும், வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி   ஓடும்    திருநெல்வேலி. முதலில்  வாசகர்களுக்கு  பஜ்ஜி  என்றால்  என்ன  சொஜ்ஜி  என்றால்  என்ன  என்பதை  விளக்கமாகச்  சொல்லிவிடுகிறேன் . அனேகமாக  பலருக்குத்  தெரிந்திருக்கும் . இருந்தாலும் இந்தக் கதைக்குத் தலைப்பு பஜ்ஜி, சொஜ்ஜி என்று அமைந்திருப்பதால் விளக்க வேண்டியது என் கடமையாகிறது.     பஜ்ஜி  பற்றி  பிரபல  எழுத்தாளர்  பாக்கியம்  ராமசாமி  ஒரு  கட்டுரையில்  இப்படி எழுதியிருப்பார் . ‘ முதலில்  பஜ்ஜி தயார் பண்ண,   உப்பு , காய்ந்த  மிளகாய் , பெருங்காயம்  சேர்த்து  நன்றாக  அரைத்து  கடலைமாவில் பக...