Posts

Showing posts from May, 2017

தீபாவளித் திருநாள்!

            தீபாவளித் திருநாள்              தீபங்கள் ஒளி சிந்தும் ஒரு தீபாவளித் திருநாள்! தீமைகள் அகன்றிட ஒரு தீபாவளித் திருநாள்! இன்பங்கள் பெருகிட  ஒரு தீபாவளித் திருநாள்! துன்பங்கள் விலகிட ஒரு தீபாவளித் திருநாள்!   செல்வங்கள் வந்திட ஒரு தீபாவளித் திருநாள்! சிறப்புடன் வாழ்ந்திட ஒரு தீபாவளித் திருநாள்! மங்கையர் மனம் மகிழ ஒரு தீபாவளித் திருநாள்! மங்களம் பொங்கிட ஒரு தீபாவளித் திருநாள்! புத்தாடைகள் புனைந்திட ஒரு தீபாவளித் திருநாள்! புத்துணர்வு பெற்றிட ஒரு தீபாவளித் திருநாள்! புன்னகை புரிந்திட ஒரு தீபாவளித் திருநாள்!  பொன் மனம் பெற்றிட ஒரு தீபாவளித் திருநாள்!  வாழ்க இந்த மானுடம்! வாழ்க இந்த வையகம்!                                                     ...

திருநெல்வேலி

              திருநெல்வேலி தென்றல் தவழ்ந்து வரும் தென் பொதிகை நெல்லை ! தேன்மது ர த் தமிழோசை   கேட்குமிடம் நெல்லை! வயலெல்லாம் நெல்லும், வழியெல்லாம் வாழையும் விளைந்திருக்கும் அழகைக் காண்பது எங்கள் நெல்லை! கடலோரம் உயர்ந்த பனை உண்டு! அதில் கிடைக்கும் நுங்கின் சுவையோ இனிதுண்டு! பதநீரின் சுவையோ கற்கண்டு! பனங்கிழங்கு கி டைப்பதெல்லாம் பொங்கலுடன் மட்டும்! தென்னை மரங்கள் உயர்ந்தோங்கி நிற்பதுவும், மாவின் மரங்கள் பரந்து, விரிந்து வளர்ந்ததுவும் பொதிகையில் தோன்றி வழியெல்லாம் வளம் தந்து நதியாகி, ஆறாகி , நட்ட பயிரெல்லாம் செழிக்க ஒடிவரும், ஆடிவரும், அழகெல்லாம் கூடிவரும்! நாடிவரும் மாந்தரெல்லாம் நாளெல்லாம் குளிக்கவரும்! பாடிவரும் பொருணைநதி இருப்பது எங்கள் நெல்லை!  நல்லவரும், மன வல்லவரும் வாழும் எங்கள் நெல்லை! நம்பி வந்தவரை வடநாட்டு வணிகரை வாழ வழி கொடுத்து, நெல்லையின் அல்வா என உலகப் புகழ் பெற வைத்த ஊரல்லவா எங்கள் நெல்லை!  கல்வியில் சிறந்த பள்ளிகள் , கல்லூரிகள் நிறைந்தது. ஆன்மிகம், கோவில், திர...