திருமண வாழ்த்து வாழ்க மணமக்கள்! வாழ்க பல்லாண்டு! வளமாக வாழ்ந்திடவே நலமாக வாழ்த்துகிறேன்! வாழ்க்கை என்ற புத்தகத்தில் இல்லறமே வாய்த்த முதல் அத்தியாயம்! இல்லறம் புத்தம் புது மலரின் நறுமணத்தை அள்ளி வரும்! நித்தம் வரும் மதி ஒளி மிக சிந்தி வரும்! வானும் மதியும் போல் தேனும் பாலும் போல் ஊனும் உயிரும் மிக ஒன்றாய்க் கலந்து நறு மலரும் மணமும் போல் மனம் மகிழ்ந்து இன்பமாய் நிலவும் உங்கள் வாழ்க்கை நித்தியமும் மங்களமாய்! மங்கள நாளிலே மங்கள நாண் பூட்டும் உங்களை வாழ்த்துகிறேன் உளம் நிறை உவகையுடன்!